கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை! நாளை முதல் நிகழ போகும் 6 முக்கிய மாற்றங்கள்! நோட் பண்ணுங்க!
டெல்லி: செப்டம்பர் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான மாற்றங்கள் நிகழலாம் என சொல்லப்படுகிறது. இவை எல்லாம் நாளை முதல் நடக்கும் என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு சில மாற்றங்களை காண போகிறோம்.

இதில் எல்பிஜி கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டும் இடம் பெறும். அது போல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது போல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அது போல் இரண்டாவது மாற்றமாக விமான எரிபொருளின் விலைகளையும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
போலி அழைப்புகள், போலி செய்திகள் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடுமையான வழிகாட்டுதலை டிராய் வெளியிட்டுள்ளது. அதன் படி பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.
நாளை முதல் எச்டிஎஃப்சி வங்கி பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஆதார் தொடர்பான சில விஷயங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ஜூன் 14 ஆம் தேதி வரை புதுப்பிக்கும் கட்டணம் இருந்த நிலையில் அது செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நாளை (செப்டம்பர் 1) முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. எனவே 3 சதவீதம் உயர்த்தினால் அது 53 சதவீதமாக உயரும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications