டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலுக்கு ஊதியம் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் பராக் அக்ரவாலுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாயாகும்.

சமூகவலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இதன் மூலம் தாங்கள் விரும்பும் கருத்துகளை ஊரறிய ஒரு நொடி பொழுதில் அறிவித்து விடலாம். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் என பெரும்பாலானோர் இதையே பயன்படுத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.

 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

திருமணம் தொடங்கி டைவர்ஸ் வரை அனைத்தையும் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரிலேயே அறிவித்து வருகிறார்கள். இதன் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த ஜாக் டோர்சி இந்த சமூகவலைதள பக்கத்தினை நல்ல முறையில் கொண்டு சென்றார்.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி

தலைமை தொழில்நுட்ப அதிகாரி

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்து வந்த இந்திய வம்சாவளி பராக் அக்ரவாலின் வளர்ச்சியையும் திறமையையும் கண்ட ஜாக் டோர்ஸி டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு பொருத்தமானவர் அக்ரவால் என கருதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருந்து வரும் நிலையில் மற்றொரு முன்னணி நிறுவனமான ட்விட்டரின் தலைமை பொறுப்பிலும் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளது பெருமிதம் கொள்ள வைக்கிறது.

ஊதியம்

ஊதியம்

சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் ஏற்கெனவே சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ள நிலையில் பராக் அக்ரவாலும் இணைந்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அக்ரவாலின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    Who Is Parag Agrawal? | Twitter New CEO | Oneindia Tamil
    அமெரிக்க டாலர்

    அமெரிக்க டாலர்

    அவருக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என தெரிகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ 7 கோடியாகும். இந்த சம்பளம் தவிர போனஸ் உள்ளிட்ட பிற சலுகைகளும் பராக் அக்ரவாலுக்கு கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Do you know what will be salary of Parag Agrawal, CEO of Twitter?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X