தப்பில்லாம இங்கிலீஷ்ல பேசவும் எழுதவும் செய்யணுமா?.. இந்த ரங்கோலியை பாருங்கள் போதும்! செம புதுமை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு வார்த்தை ஆங்கிலத்துல பேசினாலும் அது தப்பில்லாமல் பேச வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருப்பது வழக்கம்.

என்னதான் தாய்மொழி என இருந்தாலும் ஒரு மாநிலத்தை விட்டு மாநிலமோ நாட்டை விட்டு வேறு ஒரு நாடோ சென்றால் அங்கு மக்களுடன் உரையாட ஆங்கிலம்தான் கைக் கொடுக்கும். இதனால்தான் பெற்றோர் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி கொடுத்து தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பை சேர்த்துவிடுகிறார்கள்..

விண்ணப்பம்

விண்ணப்பம்

இதற்காக இரவு முழுவதும் பள்ளி வாசலில் காத்திருந்து பின்னர் அடுத்த நாள் விண்ணப்பத்தை வாங்கும் போது அவர்களுக்கு இருக்கும் சந்தோஷமே தனிதான். ஒரு சிலருக்கு ஆங்கில இலக்கணம் என்றாலே அலர்ஜிதான். தமிழில் இலக்கணம் எத்தனை அழகார இருக்கு! ஆனால் இந்த ஆங்கிலத்தில் இத்தனையா என விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ஆங்கிலம் குறைபாடு

ஆங்கிலம் குறைபாடு

ஆங்கிலத்தில் பேசாவிட்டால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசாவிட்டால் நிறைய நண்பர்கள் கிடைப்பதில்லை. பணி நிமித்தமாக இன்று பெரும்பாலானோர் ஆன்லைன் மூலமும் ஆங்கிலம் கற்று கொடுக்கும் கல்வி நிலையங்கள் மூலமும் ஆங்கிலத்தை பணம் செலுத்தி கற்றுக் கொள்கிறார்கள்.

முக்காலங்கள்

முக்காலங்கள்

ஆனால் ஆங்கில இலக்கணம் குறித்து ஒரு கோலம் வைரலாகி வருகிறது. அந்த கோலம் ஆங்கிலத்தின் முக்காலங்களை குறிக்கிறது. வட்டமாக இருக்கும் அந்த ரங்கோலியில் நடுவில் டென்ஸ் என எழுதப்பட்டுள்ளது. அதை சுற்றியுள்ள வட்டத்தில் பிரசன்ட் டென்ஸ், பாஸ்ட் டென்ஸ், ஃபியூசர் டென்ஸ் என உள்ளது. பிரசன்ட் டென்ஸில் சிம்பிள் பிரசன்ட், பிரசன்ட் கன்டினுயஸ், பிரசன்ட் பெர்பக்ட், பிரசன்ட் பெர்பக்ட் கன்டினுயஸ் என பிரிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    பேப்பரில் கோலம் போட்ட பெண் அதிகாரி-வீடியோ
    ரங்கோலி

    ரங்கோலி

    அதே போல் பாஸ்ட் டென்ஸுக்கும் ஃபியூசர் டென்ஸுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் ஒவ்வொரு உதாரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ரங்கோலியை பார்த்தாலே போதும். ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத பழகலாம். இது எந்த இடத்தில் போடப்பட்டது என தெரியவில்லை. ஆனால் இந்த கோலத்தை போட்டவர்களுக்கு உண்மையில் பொறுமையும் சமூக பொறுப்பும் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+