குடியரசு தலைவர் பதவியேற்பு விழா LIVE : நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார்! Delhi
oi-Shyamsundar I
Updated: Monday, July 25, 2022, 12:10 [IST]
டெல்லி: இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ராஷ்டிரபதி பவனில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு
#JUSTIN | திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
PHOTOS : 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு.. நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!
நாடாளுமன்ற மைய மண்டப நிகழ்ச்சிகள், வாழ்த்துகள் பெற்ற பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குப் புறப்பட்டார் திரவுபதி முர்மு
@rashtrapatibhvn அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
#JUSTIN | ‘உங்கள் நம்பிக்கை தான் என் வலிமை’ - திரௌபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது உரையை நிறைவு செய்தார்
என்னை ஜனாதிபதியாக்கிய எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு நன்றி - திரவுபதி முர்மு
#JUSTIN | ராம்நாத் கோவிந்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்!
இந்தியாவின் எந்த ஒரு ஏழையும் ஜனாதிபதியாக முடியும் என்பதற்கு என் வாழ்க்கை சான்று- ஜனாதிபதி திரவுபதி முர்மு
சிறு கிராமத்தில் பிறந்த நான் ஜனாதிபதியாகி இருப்பது பெருமிதமான தருணம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு
தேசத்தை வளமாக்க பணியாற்றுவேன்- ஜனாதிபதி திரவுபதி முர்மு
பழங்குடி இனத்தை சேர்ந்த நான் ஜனாதிபதியானது ஜனநாயகத்தின் மகத்துவம்- திரவுபதி முர்மு
ஜனாதிபதி பதவியை நான் பெற்றிருப்பது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை- ஜனாதிபதி திரவுபதி முர்மு
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு வலிமை சேர்க்கிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
#JUSTIN | குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு!
நாட்டின் புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்
நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்தார் திரவுபதி முர்மு
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, திரவுபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு- தலைமை நீதிபதி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
தேசிய கீதத்துடன் ஜனாதிபதி பதவியேற்பு விழா தொடக்கம்
நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு வருகை
நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கயா நாயுடு- திரவுபதி முர்முவை வரவேற்றனர்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சி
நாடாளுமன்றம் வருகை தந்த புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு வரவேற்பு
நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார் திரவுபதி முர்மு
குதிரைப்படை அணிவகுப்புடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு வருகை
ஜனாதிபதி பதவியை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஜனாதிபதி மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு புறப்பட்டனர்
புதிய ஜனாதிபதியாக பதவியேற்கும் திரவுபதி முர்முவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
READ MORE
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் வாக்களிப்பர்
பாராளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் இதற்கான தேர்தல் நடக்க உள்ளது
நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும்
தேர்தலில் வெற்றிபெறும் புதிய ஜனாதிபதி ஜூலை 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார்
ஜூலை 21ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிகிறது
இந்தியாவிற்கான புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
குடியரசுத்தலைவர் தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர்
நாட்டின் 15 வது குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்
பாஜகவின் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுகிறார்
எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் வழங்கப்படும்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, எம்.பி.க்களுக்கு பச்சை நிற வாக்குச்சீட்டு வழங்கப்பட உள்ளது
நாடாளுமன்ற அலுவலகம், மாநில சட்டசபை அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 4,800 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வாக்களிப்பர்
நாட்டின் ஜனாதிபதியாகும் முதலாவது பழங்குடி பெண் என்ற பெருமையை பெற உள்ளார்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை வாக்குச்சாவடியில் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்
குடியரசுத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார்
நாடாளுமன்ற வளாகத்தில் லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்கள் தனித்தனியாக வாக்களித்து வருகின்றனர்
மூத்த மத்திய அமைச்சர்கள் வாக்களித்து வருகின்றனர்
குடியரசுத்தலைவர் தேர்தல்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் லக்னோவில் வாக்களித்தார்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்
குடியரசுத்தலைவர் தேர்தல்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்
READ MORE
English summary
Indian Presidential Election Results [இந்திய ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்] 2022 LIVE News Updates in Tamil: நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் (President elections 2022) பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகிய இருவரில் வெற்றி பெற்றவர் யார்? யார் யார் எத்தனை ஓட்டுகள் பெற்றுள்ளன போன்ற இன்னும் பல சுவாரசியமான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த பக்கத்தை காணுங்கள்.