திராவிட தேசத்தின் தலைவர் ஸ்டாலின்-லோக்சபாவை அதிரவைத்த ஜெகத்ரட்சகனின் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேச்சு
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், திராவிட தேசத்தின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
லோக்சபாவில் இன்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசியதாவது: எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. திராவிட தேசத்தின் தலைவராக, எங்களுடைய தங்க தலைவர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக இருந்து பேசுகிறேன்.

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான நீங்கள் (திமுக ஆ.ராசா) லோக்சபா தலைவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் நான் பேசுவது மகிழ்ச்சி. எத்தனையோ பெருமைக்குரிய இந்திய ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது என்பது ஜனநாயகப் படுகொலையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
இந்திய ரயில்வே துறை 167 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த துறை வளம் கொழிக்கும் நிறுவனமாக விளங்கும் நிலையில் தனியாருக்கு ஏன் தாரை வார்க்கிறார்கள் என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை.
முதல் ரயில் நிலையமே அரக்கோணம் தொகுதியில்தான். ஏனெனில் வட இந்தியாவுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் அரக்கோணம் வழியாகவே செல்லும். தலப்பெருமை பெற்ற சோளிங்கரில் எல்லா ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என கேட்டோம். அரக்கோணத்தை 4-வது முனையமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். காட்பாடி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். அந்த காட்பாடிக்கு மேம்பாலம் அமைக்க கோரினோம். அதுவும் கிடைக்கவில்லை. ஓராண்டில் ரயில் விபத்தில் 319 பேர் உயிரிழந்துள்ளனர்; மொத்தம் 40 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.முந்தைய 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.
சென்னை புறநகர் ரயில்களில் கழிப்பறை வசதி என்பதே கிடையாது; 2 மணிநேர பயணம் மேற்கொள்ளும் நிலையில் கழிப்பறை வசதிகளே இல்லை. ரயில்களில் ஏசி கோச்சை மட்டும் தனியாருக்கு தாரைவார்ப்பது எப்படி நியாயமாகும்?
ரயில்வே துறை என்பதே இந்தி மொழியை திணிப்பதற்கான ஒரு துறையாகவே இருக்கிறது. ரயில்வேயில் தமிழகத்தில் ஆங்கிலம், தமிழில் எழுதுகின்றனர்; இந்தியிலும் எழுதுகின்றனர்; இந்தியில் எழுதுவதை ஒருவரும் படிப்பதும் இல்லை; ரயில்வே துறையில் மாநில மொழிகளே இல்லை. வட மாநிலங்களில் எந்த ரயில் நிலையத்திலும் ஆங்கிலமே இல்லை. தமிழ்நாட்டில் பணிபுரிகிற ரயில்வே பணியாளர்கள் இந்தி மொழி பேசுகிறவர்களாக மட்டுமே இருக்கின்றனர்; இவர்களுக்கு எதுவும் புரியவில்லை; இதுவும் ரயில் விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேசினார்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications