மசாஜ் கொடுப்பதாக... டிஆர்டிஓ விஞ்ஞானி கடத்தல்... பிக்பாஸ் பெண் போட்டியாளர் கைது!!
டெல்லி: டெல்லியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பைச் சேர்ந்த 35 வயது விஞ்ஞானியை, மசாஜ் செய்வதாக பொய் கூறி கடத்திச் சென்று, அவரது மனைவியிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் செக்டர் 74ல் குடியிருந்து வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார். அடுத்த முனையில் சுனிதா என்பவர் பேசியுள்ளார். லாஜிக்ஸ் சிட்டி சென்டருக்கு வருமாறு கூறியுள்ளார்.

அங்கு சென்ற விஞ்ஞானியை ஓயோ நிர்வகிக்கும் குணால் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, அவரது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு அவரது மனைவி தகவல் கொடுத்தார். போலீசார் பாதுகாப்புடன் ஓயோ குடியிருப்புக்கு சென்றனர். அங்கு போலீசார் மறைந்து கொண்டனர். விஞ்ஞானியின் மனைவியை மட்டும் பணத்துடன் அனுப்பினர்.
இதையடுத்து அங்கு மூன்று பெண்கள் பணத்தை வாங்குவதற்கு தயாராக நின்று கொண்டு இருந்தனர். பணத்தை வாங்க வரும்போது ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்ற இருவர் தப்பிச் சென்றனர். போலீசார் அங்கு இருந்த சுனிதா மற்றும் ஹோட்டல் மேலாளர் ராகேஷ் இருவரையும் கைது செய்தனர்.
சுனிதா முன்பு பாஜகவில் உறுப்பினராக இருந்ததாக நொய்டா பாஜக தெரிவித்துள்ளது. பிக்பாஸ் 10ல் வென்ற மன்வீர் குர்ஜாருக்கு உறவினர் என்று சுனிதா தன்னை கூறியுள்ளார். ஆனால், இவர் உறவினர் கிடையாது. மன்வீரின் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுனிதாவும் பிக் பாஸில் தோன்றியவர் என்று கூறியுள்ளார்.
இவரது தலைமையில் மசாஜ் கொடுப்பதாக இந்தக் கும்பல் இரண்டாவது முறையாக கடத்தலில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டுள்ளது. டெல்லியில் செக்டர் 41ல் இருக்கும் ஓயோ ஹாஸ்டலில் இந்த கடத்தலை அரங்கேற்றியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications