டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்திர ஜெயினை அமலாக்கப் பிரிவு கைது செய்ய திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயினை அடுத்த சில நாட்களில் அமலாக்கப் பிரிவு கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவா, பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி பாஜகவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்கின்றன கருத்து கணிப்புகள். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; ஆனால் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன அந்த கருத்து கணிப்புகள்.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி செல்வாக்குடன் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு சவாலாகவும் இருக்கிறது ஆம் ஆத்மி.

சத்யேந்திர ஜெயினுக்கு குறி

சத்யேந்திர ஜெயினுக்கு குறி

இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக எங்கள் கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கப் பிரிவு கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் சத்தியேந்திர ஜெயின் வீட்டில் 2 முறை சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் எதுவும் கிடைக்கவில்லை.

வாங்க.. ரெய்டு நடத்துங்க

வாங்க.. ரெய்டு நடத்துங்க

இப்போது மீண்டும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக, மத்திய விசாரணை ஏஜென்சிகளை முழுமையாக களமிறக்குகிறது. சோதனைகள், கைதுகள் என்பது எல்லாம் பாஜகவின் தோல்வியைன் வெளிப்பாடுகள்தான். நாங்கள் உண்மையின் பக்கம் நிற்கிறோம். இதெற்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.

கைது செய்தால் ஜாமீன் வாங்குவோம்

கைது செய்தால் ஜாமீன் வாங்குவோம்

உங்கள் வசம் இருக்கும் சிபிஐ, வருமான வரித்துறை, போலீஸ் என எத்தனை ஏஜென்சிகள் இருக்கிறதோ அத்தனையும் அனுப்புங்கள். அஞ்சப் போவதில்லை. ஏற்கனவே 21 எம்.எல்.ஏக்களை நீங்கள் கைது செய்திருக்கிறீர்கள். இப்போது சத்யேந்திர ஜெயினை கைது செய்யப் போகிறீர்கள். கைது செய்து கொள்ளுங்கள்.. ஒருசில நாட்களில் ஜாமீன் வாங்கி விடுவோம்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங்

அதேநேரத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி போல நாங்கள் கதறமாட்டோம். கடந்த 111 நாட்களாக சரண்ஜித்சிங் சன்னி என்ன செய்தார் என்பதை பஞ்சாப் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர். சத்யேந்திர ஜெயின் வீட்டுக்குத்தான் என்றில்லை.. மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகள் எங்க வீட்டுக்கும் வரலாம்.. மணீஷ் ஷிஷோடியா வீட்டுக்கும் வரலாம்.. வரவேற்கிறோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

English summary
Delhi Chief Minsiter Arvind Kejriwal said that ED planning to arrest Satyendar Jain with-in days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X