கர்நாடகா தேர்தலில் போட்டி-அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தே ஆகனும்-தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் அடம்!
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் தம்மை அக்கட்சி பொதுச்செயலாளராக இன்றே அங்கீகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை இதுவரை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை.

இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூடி அதிமுக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறது என செய்திகள் வெளியாகி இருந்தன. இதனிடையே திடீரென கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக அம்மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனை அறிவித்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுக முயற்சித்தது. ஆனால் தற்போது பாஜக வேட்பாளருக்கு எதிராக புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசனை வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அத்துடன் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் ஒரு மனு கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார். கர்நாடகாவில் வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைகிறது. ஆகையால் அதிமுக பொதுச்செயலாளராக தம்மை தேர்ந்தெடுத்ததை இன்றே அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications