13 கோடி வாக்காளர் நீக்கம்.. எதிர்க்கட்சிகள் தேர்தல்களை புறக்கணிக்கணும்! மாஜி பாஜக அமைச்சர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் நடைமுறையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார். ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பதவி விலகும் வரை எதிர்க்கட்சிகள் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்கே சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது எஸ்ஐஆர் நடைமுறை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்கள் பல்வேறு முடிவுகள் தொடர்பாக கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரியளவில் எடுத்து சென்று வருகின்றன.

Election commission SIR

கடிதம்

இதற்கிடையே முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் இது தொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வியுடன் தனது கடிதத்தைத் தொடங்கிய ஆர்கே சிங், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் அவருக்கு மேலே இருப்பதாக அவர் கூறும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 21ஐ சுட்டிக்காட்டிய அவர், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடத்துவது சட்டவிரோதம் என்றும் இதை அனுமதித்த உச்ச நீதிமன்ற உத்தரவும் தவறானது என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகாரம்

பிரிவு 22ஐ குறிப்பிட்ட ஆர்கே சிங், வாக்காளர் பெயரை நீக்கும் அதிகாரம் இஓர்ஓ எனப்படும் தேர்தல் பதிவு அதிகாரிக்கே இருப்பதாக தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுத்து, மேல்முறையீடுகள் முடிந்த பிறகே பெயரை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், 2003ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் பதிவு அதிகாரிகளால் பட்டியலிடப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் நீக்கப்பட்டதாகவும், அவர்களிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் ஃபார்ம் 6 மூலம் விண்ணப்பித்து தங்களது தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஃபார்ம் 6

ஃபார்ம் 6 விண்ணப்பத்தில் 2003ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை நம்பரை குறிப்பிடும்படி கூறப்பட்டுள்ளதாக கூறிய ஆர்.கே. சிங், 2026ல் 18 வயது நிரம்பிய ஒருவர் 2003ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை எங்கிருந்து பெறுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இளம் வாக்காளர்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பதிவு அதிகாரிகளால் தகுதியானவர்கள் என ஏற்கப்பட்ட 16 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், அவர்களுக்கு எதிராக மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதால் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

13 கோடி பெயர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் நடவடிக்கையில் சுமார் 13 கோடி பெயர்கள் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆர்கே சிங் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்களை நீக்கவே இந்த எஸ்ஐஆர் நடைமுறை பயன்படுத்தப்பட்டதா என்றும் ஆர்கே சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் முயற்சி எடுக்க தேவையில்லை என்று குறிப்பிட்ட ஆர்கே சிங்க, நாடாளுமன்றத்தில் தேவையான நம்பர் இல்லாததால் அது பயனற்றதாக இருக்கும் என்றும் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் புறக்கணிப்பு

மேலும் தலைமை தேர்தல் ஆணையரும் தேர்தல் ஆணையர்களும் பதவி விலகும் வரை அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல்களில் பங்கேற்க மறுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய முந்தைய தேர்வு குழுவின் மூலமாகவே தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேல்முறையீடுகள் நிலுவையில் இருந்தபோது நடத்தப்பட்ட தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், எதிர்கால தேர்தல்களை வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்றும் ஆர்.கே. சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

யார் இவர்?

முன்னாள் மத்திய அமைச்சரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்கே சிங், முன்னாள் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றியவர். 2013ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த அவர், பீகாரின் ஆரா தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வென்றார். 2017 முதல் மோடி கேபினட்டில் அமைச்சராக இருந்தார். பீகாரில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுப்பியதால் இவர் நவம்பர் 2025இல் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+