12 ராஜ்யசபா எம்பி பதவி காலி இடங்களுக்கு செப்.3-ல் தேர்தல்! ஆக.14 முதல் வேட்பு மனுத் தாக்கல்!
டெல்லி: ராஜ்யசபாவில் காலியாக உள்ள 12 எம்பி பதவி இடங்களுக்கு செப்டம்பர் 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட்
14-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள் ஆக.22 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27. ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 3-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அஸ்ஸாம், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, (2 இடங்கள்), ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் 12 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்தனர். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 3 பேரும் வெற்றி பெற்றதால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதேபோல மிசா பாரதி, கேசி வேணுகோபால், பிப்லாப்குமார் தேவ் உள்ளிட்டோரும் லோக்சபா தேர்தலில் வென்றதால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மொத்தம் 10 ராஜ்யசபா எம்பிக்கள், லோக்சபா தேர்தலில் வென்றதால் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். தெலுங்கானா, ஒடிஷாவை சேர்ந்த இரு எம்பிக்கள் ஜூலை மாதம் எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனால் ராஜ்யசபாவில் மொத்தம் 12 எம்பி பதவி இடங்கள் காலியாக உள்ளன. இந்த 12 இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 14-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள் ஆக.22 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27. ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 3-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications