இரட்டை இலைக்கு லஞ்சம்? டிடிவி தினகரனிடம் மீண்டும் விசாரணை! 10 மணி நேரமாய் பதறவைத்த கேள்விக் கணைகள்!
டெல்லி : இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் மரணத்திற்கு பிறகு நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர்
இதன் காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணயம் முடக்கிய நிலையில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்

இரட்டை இலைக்கு லஞ்சம்
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறையின்ர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

டிடிவி தினகரன் மீது புகார்
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும் கூடுதலாக ஒரு வழக்கினைப் பதிவு செய்திருந்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

விசாரணைக்கு ஆஜர்
விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அந்த் சம்மனில் கூறப்பட்டிருந்த நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஜரான நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஆஜரான அவரிடம் சுமார்10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கிடுக்குப்பிடி கேள்விகள்
அந்த விசாரணையின் போது சுகேஷ் சந்திர சேகருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது, பணம் யாரின் பெயரால் கேட்கப்பட்டது, வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலைக்கு காரணம் என்ன? ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கிடுக்குப்பிடி கேள்விகளை டிடிவி தினகரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டதாகவும், பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது என அவர் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications