கணவன் குழந்தைகளை விட்டு ஓடிவந்த பெண் - 6 குழந்தைக்கு தந்தையான கள்ளக்காதலனால் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கள்ளக்காதல் சம்பவங்கள் பெரும்பாலும் கொலைகளில்தான் முடிகின்றன. வடக்கு டெல்லியில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவன், குழந்தைகளை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு அவனே எமனாகியிருக்கிறான். அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்து அந்த பெண் மறுக்கவே, அடித்து உதைத்து பூட்டி விட்டு போய்விட்டான். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வடக்கு டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள அந்த அபார்ட்மெண்ட்டில் ஒரு அறையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் வாடகைக்கு குடியேறினர். கடந்த மூன்று நாட்களாக அந்த அறை பூட்டப்பட்டிருக்கவே, வீட்டு வாடகை வாங்குவதற்காக அபார்ட்மெண்ட் ஓனர் வந்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது கண்டு தட்டிப்பார்த்தார்.

மூன்று நாட்களாக அறை பூட்டப்பட்டிருக்கிறதே என்ற சந்தேகத்தில் ஜன்னலை திறந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். மயக்கமான நிலையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடந்தால் பலமான பொருளினால் அவரது தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டிருந்தது.

ரத்த வெள்ளத்தில் மீட்பு

ரத்த வெள்ளத்தில் மீட்பு

உயிர் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தது. போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து பெண்ணை மீட்டனர். உடனடியாக சத்யவதி ராஜா ஹரீஸ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

அந்த பெண் கடந்த 12 மணிநேரமாக மயக்க நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். அந்த பெண்ணுடன் கடந்த இரண்டு மாத காலமாக தங்கியிருந்த அந்த நபரை காணவில்லை. மயக்கநிலையில் இருக்கும் அந்தப்பெண் கண் விழித்து பேசினால் மட்டுமே நடந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 கள்ளத்தொடர்பால் பாதிப்பு

கள்ளத்தொடர்பால் பாதிப்பு

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுடன் தங்கியிருந்த நபரின் பெயர் அருண்ஷா என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயானவர். அந்த அருண்ஷாவிற்கும் ஏற்கனவே திருமணமாகி ஆறு குழந்தைகள் இருக்கின்றன. இந்த ஜோடி காதல் மயக்கத்தில் ஊரை விட்டு ஓடி நரேலா பகுதியில் அபார்ட்மெண்ட் எடுத்து தங்கியுள்ளனர்.

அதுக்கு அழைத்த நபர்

அதுக்கு அழைத்த நபர்

கள்ளக்காதலனுடன் ஓடி வந்தும் அந்த பெண்ணிற்கு நிம்மதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எப்போது பார்த்தாலும் உறவுக்கு அழைத்துக்கொண்டிருந்தானாம். ஆனால் அந்த பெண் மறுக்கவே, அடித்து காயப்படுத்திவிட்டு அருண்ஷா மாயமாகிவிட்டான். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக கணவனை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிவந்து கடைசியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் அந்தப் பெண்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+