Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் போலி பல்கலைக்கழகங்கள்.. உ.பியில்தான் அதிகம்.. தமிழ்நாட்டில் ஒன்னு கூட இல்லை! முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது

இந்த அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 21 பல்கலைக்கழகங்கள் போலியாக இயங்கி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 Fake Universities in India; Not in Tamil Nadu but in Puducherry

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் ஏதும் இல்லை.

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த தகவலை யுஜிசி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி டெல்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் 8 போலியானவை என்று தெரியவந்துள்ளது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் 4, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒன்று என போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் போலி என்பது மலிவானதாக உள்ளது. இந்நிலையில் இது உணவு பொருள், மின்னணு சாதனங்கள் என தொடங்கி தற்போது கல்வி வரை நீண்டுள்ளது. இதன் தொடர்ச்சி போலி பட்டங்கள். இந்தியாவின் மிக உயரிய படிப்பாக கருதப்படும் டாக்டர் படிப்புக்கு அடுத்தபடியாக முனைவர் பட்டம் பெற்றவர்கள் மெத்த படித்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் சமீப காலங்களாக இந்த டாக்டர் பட்டங்களே போலியாக வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் முதுகலை பட்டம் பெற்ற நபர்களுக்கு பி.எச்.டி எனப்படும் டாக்டர் பட்டத்தை அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு வழங்குகின்றனர். டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் அதற்கு பல்வேறு சட்டத்திட்டங்கள் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் மேற்குறிப்பிட்டவாறு சில நாட்களாக போலி டாக்டர் பட்டம் பெற்றதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமிருந்தன. இதனால் போலி பல்கலைக்கழகங்களை கண்டறிய வேண்டி தேவை ஏற்பட்டது.

இவ்வாறு பணத்தை மட்டுமே கொண்டு செயல்படும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்து யுஜிசி தனது ஆய்வை தொடர்ந்து. இந்த ஆய்வின் அடிப்படையில்தான் மேற்சொன்ன 21 போலி பல்கலைக்கழகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த லிஸ்டில் போலி இல்லை என்றாலும், புதுச்சேரியில் ஒரு போலி பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'Sree Bodhi academy of Higher Education, No.186, Thilaspet, Vazhuthavoor Road, Puducheey - 605009 எனும் முகவரியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+