பெரிய ஏமாற்றமா இருக்கு.. ஏன் இந்த முடிவு? விவசாய சட்டங்கள் வாபஸ்.. ட்வீட்டரில் வருந்திய பாஜகவினர்!
டெல்லி: விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு நாடு முழுக்க ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளனர்.
அதேபோல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இடைவிடாமல் போராடிய விவசாயிகள் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி விவசாய சட்டங்கள் மூன்றையும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
விவசாயிகளுக்கு எப்போதும் நல்லது நினைப்பவன் நான். விவசாய சட்டங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. அதனால் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுகிறோம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அறிவிப்பு
பாஜகவினர் சிலர் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி பலரும் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்று உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்களின் குரலை ஒரு பிரதமர் கேட்க வேண்டும். நம் பிரதமர் மோடி மக்களின் குரலை கேட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார். அவர் எப்போதும் மக்களின் குரலுக்கு செவி மடுப்பார் என்று பாஜகவினர் பலர் இந்த முடிவை பாராட்டி வருகிறார்கள்.

ஏற்க முடியவில்லை
ஆனால் இத்தனை நாட்கள் விவசாய சட்டங்களுக்கு ஆதரவு அளித்து, விவசாய போராட்டங்களை எதிர்த்து வந்த பாஜகவினர் சிலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தது ஏமாற்றமாக இருக்கிறது என்று பாஜகவினர் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். #disappointed என்ற டேக்கையும் இவர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். பாஜக இந்த அறிவிப்பில் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

சட்டம்
இந்த சட்டத்தை அரசு வாபஸ் வாங்காது என்று எதிர்பார்த்தோம். ஆனால் பிரதமர் மோடி சட்டத்தை வாபஸ் வாங்கி உள்ளார். இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவு நெட்டிசன்கள் பலர் வருத்தமாக ட்வீட் செய்து வருகிறார்கள். பிரபல பாஜக உறுப்பினர்கள் சிலரும் இதில் ட்வீட் செய்துள்ளனர். இன்னும் சிலரோ விவசாயிகள் இந்த சட்டத்தை புரிந்துகொள்ளவில்லை.

ஏமாற்றம்
விவசாயிகள் இந்த சட்டத்தால் பல வகைகளில் பயன் அடைந்து இருப்பார்கள். ஆனால் இதை எதிர்த்து பேசி, விவசாயிகள் இந்த போராட்டத்தில் உண்மையில் தோல்வி அடைந்துவிட்டனர். இந்த சட்டத்தை வாபஸ் வாங்கியது உண்மையில் இடைதரகர்களுக்கான வெற்றி என்றும் பாஜகவினர் சிலர் வருத்தமாக குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலரோ இந்த அறிவிப்பு மோடியின் இமேஜை கொஞ்சம் குறைத்துவிடும்.
Recommended Video

வலிமை
அவருக்கு இருக்கும் வலிமையான இமேஜுக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம். மோடி பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. பெரிய திட்டங்களை மனதில் வைத்து கூட பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் போராட்டத்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்ற முன்னுதாரணத்தை இது ஏற்படுத்திவிட்டது என்றும் பாஜகவை சேர்ந்த சில நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications