பரிதவிக்கும் தலைநகர்.. கொரோனா நோயாளிகளின் வலியை போக்க.. வழி கொடுக்கும் விவசாயிகள்.. என்னனு பாருங்க!
டெல்லி: அவசர தேவைக்கு ஆக்சிஜன் வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கு வசதியாக டெல்லி சிங்கு எல்லையில் இருக்கும் தடுப்புகள் அகற்றப்படும் என்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் கூறினார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் சுமார் 5 மாதங்களுக்கு மேலாக தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேசுவார்த்தையில் பயன் இல்லை
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

கொரோனா 2-வது அலை
வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

டெல்லியின் பரிதாபம்
கட்டுடக்கடங்காமல் அதிகரிக்கும் தொற்றுகள், நோயாளிகளை சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடமில்லாதது, மருத்துவனையில் இருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாதது என டெல்லி திண்டாடி வருகிறது. டெல்லியில் ஆக்சிஜன் தட்டுபாடால் நோயாளிகள் இறப்பதால் அங்கு அவசர, அவசரமாக விமானப்படை மூலம் ஆக்சிஜன் கொண்டு வந்து சப்ளை செய்யப்படுகிறது.

தடுப்புகள் அகற்றப்படும்
இந்த நிலையில் இவ்வாறு அவசர தேவைக்கு ஆக்சிஜன் வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்வதற்கு வசதியாக டெல்லி சிங்கு எல்லையில் இருக்கும் தடுப்புகள் அகற்றப்படும் என்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் கூறினார்கள். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்கள் கூறுகையில், ' கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரிக்கிறோம்.

பாஜக குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் சிரமம் ஏற்படுத்த விரும்ப மாட்டோம். சிங்கு எல்லையில் அவசர கால தேவைக்கு தடுப்புகள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்படும்' என்று கூறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதைத் தடுக்கிறார்கள் என்று பாஜக ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications