டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம்-ஆதரவு தெரிவித்த ரிஹானா,கிரேட்டா தன்பெர்க் மீது மத்திய அமைச்சர்கள் கடும் சீற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோருக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக 70 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜனவரி 26-ல் விவசாயிகள் போராட்டத்துக்குள் ஊடுருவிய விஷமிகளால் டெல்லி போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம் நீடிக்கிறது. பஞ்சாப், ஹரியானாவில் இருந்து விவசாயிகள் அணி அணியாக இந்த போராட்டத்தில் பங்கேற்க வருவதால் அவர்களைத் தடுக்கும் வகையில் முள்வேலிகள், கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

நடிகர் தீப் சித்து குறித்து தகவல் கொடுங்க...ரூ.1 லட்சத்தை வாங்கிக்குங்க...டெல்லி போலீசார் அறிவிப்பு!நடிகர் தீப் சித்து குறித்து தகவல் கொடுங்க...ரூ.1 லட்சத்தை வாங்கிக்குங்க...டெல்லி போலீசார் அறிவிப்பு!

ரிஹானா, கிரேட்டா

ரிஹானா, கிரேட்டா

இந்நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, பருவநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சர்வதேச பிரபலங்களின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரபலங்கள் கருத்துகளை தெரிவிக்கும் முன் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு

மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு

இந்த அறிக்கையை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரிசைகட்டி சமூக வலைதளங்களில் ரிஹானா, கிரேட்டா தென்பெர்க் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #indiaTogether #IndiaAgainstPropaganda ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் இந்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

பின்னணியில் யார்?

பின்னணியில் யார்?

மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைகளை பார்த்தோம். சில பிரபலங்கள் உண்மையை தெரிந்து கொள்ளாமலேயே புரிந்து கொள்ளாமலேயே கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர் என்றார். மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ, இந்தியாவுக்கு எதிரான இத்தகைய விஷம பிரசாரங்களின் பின்னணியில் இருப்பது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜேபி நட்டா கண்டனம்

ஜேபி நட்டா கண்டனம்

மத்திய அமைச்சர்கள் விகேசிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோரது பெயரை குறிப்பிடாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

English summary
Union ministers condemned that the tweets on Rihanna, Greta for Delhi Farmers Protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X