"மீண்டும் போராட்டத்தை தொடங்குவதை தவிர வேறு வழியில்லை.." கொந்தளிக்கும் விவசாயிகள்.. சிக்கலில் பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5 மாநில தேர்தல் நெருங்கும் சூழலில், மீண்டும் போராட்டத்தைத் தொடங்க தயாராக உள்ளதாக விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மத்திய அரசு கடந்த 2020இல் கொண்டு வரப்பட்ட விவசாய சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 11 மாதங்களாக இந்தப் போராட்டம் நீடித்தது.

முதலில் இந்த விவசாய சட்டங்களை வாபஸ் பெற வாய்ப்பே இல்லை என்று கூறி மத்திய அரசு கூறி வந்த நிலையில், கடந்த நவ. மாதம் திடீரென விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

 விவசாயிகள்

விவசாயிகள்

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்குப் பின்னரே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். நடைபெறும் 5 மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பலரும் விமர்சித்தனர். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடிதம்

கடிதம்

இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பது குடியரசுத் தலைவரின் அரசியலமைப்புச் சட்டத்தின் கடமை. விவசாயிகளுக்கு எதிராகவே இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் உழைப்பால்தான் உணவு தானியங்களில் இந்த நாடு தன்னிறைவு அடைந்துள்ளது என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

விவசாயிகளின் அயராத முயற்சியால் ஊரடங்கு மற்றும் பொருளாதார மந்தநிலை இருந்த காலகட்டத்திலும் கூட நாட்டின் விவசாய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தது. விவசாயிகளுடன் விளையாடுவது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அளித்த கடிதத்தில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை விவசாயிகளின் பொறுமையைச் சோதிப்பது சரியான நடவடிக்கை இல்லை.

 மீண்டும் போராட்டம்

மீண்டும் போராட்டம்

மத்திய அரசு தனது வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு தேவை என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அது தொடர்பாகவும் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் அமைப்புகளின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து வரும் பிப். 3ஆம் தேதி நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் முக்கிய தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

சிக்கல்

சிக்கல்

ஏற்கனவே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட இன்று துரோகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், விவசாயிகளின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+