தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம்...வேலையிழப்பு...சலுகை பணம்... மோடி அரசு உத்தரவு!!
டெல்லி: தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து கொரோனா கால கட்டத்தில் வேலையிழந்து இருந்தால், அவர்களுக்கு சலுகைத் தொகையாக 50 சதவீத சம்பளத்தை வழங்குவதற்கு பிரதமர் மோடி அரசு அனுமதித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வேலையிழந்தவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதன் மூலம் 40 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தப் பயனை வேலையிழந்தவர்கள் உடனடியாக பெறுவதற்கு நடைமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தெரிவித்துள்ளது.

அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா திட்டத்தை 2021, ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. டிசம்பர் 31க்குப் பின்னர் இந்த திட்டத்தில் எந்த தளர்வுகளும் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலையிழப்பு ஏற்பட்டால், 90 நாட்களுக்குப் பின்னர்தான் பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இதில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, 30 நாட்கள் என்று குறைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்காமல், நேரடியாக தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் கிளை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செலுத்தி, தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். குறைந்தது 78 நாட்களுக்கு பணம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் தற்போது அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 21,000த்துக்கும் குறைவாக சம்பளம் பெறுபவர்கள் இந்த கழகத்தில் உறுப்பினர்களாக சேரலாம். இவர்களது அடிப்படை சம்பளத்தில் இருந்து 075% தொழிலாளர்களாலும், 3.25 சதவீதம் நிர்வாகத்தினராலும் செலுத்தப்படும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications