இந்தியாவின் கோவாக்சின் சான்றிதழ்:எஸ்டோனியா, கிரிக்ஸ்தான்,பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா அங்கீகாரம்
டெல்லி: இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து எஸ்டோனியா, கிரிக்ஸ்தான்,பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய 5 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று காலை வரையில் மொத்தம் 106.31 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 3,36,68,560 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.20% ஆக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப்பின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரில் இதுவே அதிகமான அளவாகும்.

குறைந்தன ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,58,817 ஆக உள்ளது; கடந்த 248 நாட்களில் இது குறைந்த அளவு. நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.46 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.

ஆஸ்திரேலியா அங்கீகாரம்
இந்நிலையில் இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி எந்த நிமிடத்திலும் கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

5 நாடுகள் அங்கீகாரம்
மேலும் எஸ்டோனியா, கிரிக்ஸ்தான்,பாலஸ்தீனம், மொரிஷியஸ், மங்கோலியா ஆகிய 5 நாடுகளிலும் கோவாக்சின் சான்றிதழுக்கு அங்கீகாரம் அளித்திருக்கின்றன. மத்திய அரசின் இந்த சான்றிதழை அங்கீகரிப்பதில் பல நாடுகள் தயக்கம் காட்டி வந்தன. பிரதமர் மோடியின் ஜி20 உச்சி மாநாட்டு பயணத்துக்குப் பின்னர் இந்திய அரசின் சான்றிதழ்களுக்கு அடுத்தடுத்து நாடுகள் அங்கீகாரம் வழங்கி வருகின்றன.
Recommended Video

ஏற்கனவே அனுமதி தந்தவை
நமது மத்திய அரசு வழங்கும் சான்றிதழை ஏற்க தொடக்கத்தில் பிரிட்டன் மறுத்தது. ஆனால் மத்திய அரசு, பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவித்தது. இதனையடுத்து நமது சான்றிதழையும் பிரிட்டன் ஏற்றது. அதனை அடுத்து ஹங்கேரி, செர்பியா ஆகியனவும் இந்தியாவின் கொரோனா சான்றிதழை அங்கீகரித்தன.












Click it and Unblock the Notifications