Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது? முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து அப்படியே 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி குறித்து பேசியிருந்தார். இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி குறித்து முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

tax Nirmala Sitharaman GST

அதன்படி, தேங்காய் எண்ணெய், சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், மேஜைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், நூடுல்ஸ், பாஸ்தா, உணவுப் பொருட்கள், ரொட்டிகள், சைக்கிள்கள், பல மருந்துகள் மற்றும் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் ஆகியற்றுக்கு 12 மற்றும் 18 சவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டு ஜிஎஸ்டி 5% ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட நாப்கீன்கள், மிக்சர், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவளிக்கும் பாட்டில்கள், டயப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்கள் ஆகியவற்றுக்கும் 12 மற்றும் 18 சதவிகிதத்திலிருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வேளாண்பொருட்களை பொறுத்தவரை, டிராக்டர், அதன் டயர்கள் மற்றும் பாகங்கள், குறிப்பிட்ட உயிரி-பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச்சத்துக்கள் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு & தெளிப்பான்கள், சாகுபடி, அறுவடை மற்றும் கதிரடிப்பதற்கான விவசாய, தோட்டக்கலை அல்லது வனவியல் இயந்திரங்களுக்கும் முன்பு 12 முதல் 18% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. இது தற்போது 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ துறை

இந்த துறையில் தனிப்பட்ட மருத்துவ காப்பீடுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. முன்னர் இதற்கு 18% வரை வரி இருந்தது. அதேபோல தெர்மோமீட்டர், மருத்துவ தர ஆக்ஸிஜன், அனைத்து நோயறிதல் கருவிகள் & வினையூக்கிகள், குளுக்கோமீட்டர் & சோதனை கருவிகள், பார்வை திறன் கண்ணாடிகள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 12% ஜிஎஸ்டி இருந்தது. இந்த முறை 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டோமொபைல் துறை

இந்த துறையை பொறுத்தவரை, பெட்ரோல் & பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் (1200 சிசி & 4000மிமீக்கு மிகாமல்), டீசல் & டீசல் ஹைப்ரிட் கார்கள் (1500 சிசி & 4000மிமீக்கு மிகாமல்), 3 சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் (350 சிசி & அதற்குக் கீழே), பொருட்களை கொண்டு செல்வதற்கான மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

கல்வித்துறை

இந்த துறையில் வரைபடங்கள், விளக்கப்படங்கள் & உலக உருண்டைகள், பென்சில்கள், ஷார்ப்னர், க்ரேயன்கள் & பேஸ்டல்கள், உடற்பயிற்சி புத்தகங்கள் & குறிப்பேடுகள், ரப்பர்கள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 5-12% வரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை இவை அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

எலெக்ட்ரானிக் பொருட்கள்

ஏர் கண்டிஷனர்கள். தொலைக்காட்சி (32"க்கு மேல் LED & LCD TVS உட்பட), மானிட்டர்கள் & ப்ரொஜெக்டர்கள், டிஷ் வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றிற்கு 28% ஆக இருந்த ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+