டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமரின் புதிய ஆலோசகராக.. முன்னாள் உயர் கல்வித்துறைச் செயலாளர் நியமனம்.. யார் இவர்? ஏன் முக்கியம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் ஆலோசகராக 1985 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் உயர் கல்வித்துறை முன்னாள் செயலாளருமான அமித் காரே நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே நியமிக்கப்பட்டுள்ளார். அமித் கரே 1985 பேட்ஜ் பீகார் - ஜார்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவர். இவர் உயர் கல்வித்துறை செயலாளராகக் கடந்த செப். 30ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி! 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- பொன்விழா ஆண்டில் அதிமுகவுக்கு மிக மோசமான தோல்வி!

ஓய்வு பெற்று சில நாட்களே ஆகும் நிலையில், இவர் தற்போது பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமித் கரே நியமனம்

அமித் கரே நியமனம்

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரேவை பிரதமரின் ஆலோசகராக நியமிக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய செயலாளர் அந்தஸ்து வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும்வரை அமித் காரே பதவியில் இருப்பார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை

ஓய்வு பெறும் முன் உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த அமித் கரே பிரதமர் மோடியின் ஆலோசனையின் மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இவர் கடந்த 2019 டிசம்பரில் உயர் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். புதிய கல்விக்கொள்கையை உருவாக்கும் பணிகள் அதன் பின்னரே தீவிரமடைந்தது. கடந்த 2020 ஜூலை மாதம் 29இல் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்துள்ளார்

என்ன செய்துள்ளார்

அதேபோல தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் செயலாளராக இருந்தபோது, டிஜிட்டல் மீடியா விதிமுறைகளில் பல முக்கிய மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தியவரும் இவர் தான். பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக இருந்த முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் பி.கே. சின்ஹா, முன்னாள் செயலாளர் அமர்ஜித் சின்ஹா ஆகியோர் இந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றனர்.

எத்தனை ஆண்டுகள்

எத்தனை ஆண்டுகள்

இந்தச் சூழலில் முடிவுகள் எடுப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் நபர் என்று அறியப்பட்ட அமித் காரே, பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும்வரை அமித் காரே பதவியில் இருப்பார் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

English summary
Amit Khare was appointed as PM Modi’s advisor. Who is Amit Khare, PM Modi’s news advisor?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X