எல்லாம் இமயமலை சாமியாரால்.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நீதிமன்ற காவல்.. விஐபியும் வீட்டு சாப்பாடும் இல்ல
டெல்லி : தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள என்எஸ்சி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்இ நிர்வாக இயக்குநர்-தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.
தனது பதவி காலத்தின் பல்வேறு முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகார் தெரிவித்தது.

என்எஸ்இ செயல் அதிகாரி
மேலும், என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் உரிய வழிமுறைகள் இன்றி நியமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இமயமலையில் உள்ள மர்ம யோகி ஒருவரின் வழிகாட்டுதலின்படியே ஆனந்த் சுப்ரமணியனை அப்பதவிக்கு நியமித்ததாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

ஆனந்த் சுப்ரமணியன் கைது
தனியார் நிறுவனத்துக்கு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது.

இமயமலை சாமியார் யார்?
கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். சிபிஐ விசாரணையின் போது இமயமலை யோகியாக சித்ரா ராமகிஷ்ணாவுக்கு இமெயில்களை அனுப்பியது அவரது ஆலோசகரான ஆனந்த் சுப்ரமணியம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர் தனது முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா வாயிலாக செயல்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இந்நிலையில், 7 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லிநிதிமன்றம், தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications