அதிரடிக்கு பெயர் போனவர்.. மே.வங்க கவர்னர் டூ துணை ஜனாதிபதி வரை.. யார் இந்த ஜெகதீப் தன்கர்?
டெல்லி: துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உயரிய பொறுப்புகளை வகித்துள்ள ஜெகதீப் தன்கர் அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்து தற்போது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவரது திடீர் ராஜினாமா பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.

யார் இந்த ஜெகதீப் தன்கர்
எனினும், தனது உடல் நிலையை காரணம் காட்டி பதவியில் இருந்து விலகியிருக்கிறார் ஜெகதீப் தன்கர். உயரிய பொறுப்புகளை வகித்துள்ள ஜெகதீப் தன்கர் அதிரடி கருத்துகளுக்கு பெயர் போனவர். யார் இவர் என்ற விவரங்களை பார்க்கலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீப் தன்கர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், ராஜஸ்தானில் உள்ள கல்லூரியில் பட்டப்டிப்பை முடித்தார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநில ஒலிம்பிக் கூட்டமைப்பு, ராஜஸ்தான் டென்னிஸ் அமைப்புகளின் தலைவராக இருந்துள்ளார்.
ஜனதா தளம் கட்சி
ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஜெகதீப் தன்கர் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதைய சந்திரசேகர் ஆட்சி காலத்தில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சராகவும் கொஞ்ச காலம் பதவி வகித்துள்ளார்.
மம்தா பானர்ஜியுடன் மோதல்
அதன்பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு பாஜகவில் அவர் இணைந்தார். வழக்கறிஞரான இவரை கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக பாஜக நியமித்தது. மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார். மம்தாவுக்கும் ஜெகதீப் தன்கருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தேசிய அளவில் கவனம் பெற்றது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக ஆளுநர் மூலமாக தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் இதன் பிறகே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜியுடன் வெளிப்படையான மோதலை ஜெகதீப் தன்கர் கடைப்பிடித்தார். ஆளுநர் மாளிகை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். குடியரசு துணைத் தலைவரே மாநிலங்களவையின் தலைவராகவும் இருப்பார். இதன்படி, மாநிலங்களவையிலும் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்டார். ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்திற்கு போதிய எம்பிக்கள் ஆதரவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. இப்படி பல்வேறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத அதிரடி கருத்துகளால் அறியப்பட்ட ஜெகதீப் தன்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில், பணக்கட்டுகள் சிக்கிய விவகாரத்தில் ஜெகதீப் தன்கர் தெரிவித்த கருத்துகளும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications