கர்நாடகா, பஞ்சாப், இப்போ ராஜஸ்தான்! லிஸ்ட் போய்கிட்டே இருக்கு.. காங்-ஐ சுழன்றடிக்கும் உட்கட்சி மோதல்
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல்களில் வென்ற மாநிலங்களில் கூட ஆட்சியைத் தக்க வைப்பது பெரியதொரு சிக்கலாகவே இருந்து வருகிறது.
2018 சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதிலும், அங்கு ஆட்சியைக் காப்பாற்றுவதற்குக் காங்கிரஸ் தொடர்ச்சியாகப் போரடியே வருகிறது.
இந்த இந்தி மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும், சில மாதங்களிலேயே இந்த மாநிலங்களில் உட்கட்சி குழப்பம் என்பது காங்கிரசுக்குச் சிக்கலைக் கொடுத்தது.

ராஜஸ்தான் சிக்கல்
இந்த உட்கட்சி பூசல் என்பது பிரதமர் மோடி அந்த மாநிலங்களில் உள்ளே நுழைய வழிவகுத்துவிட்டது. இதேபோன்ற அரசியல் குழப்பம் தான் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், அங்கு மீண்டும் கெலாட் vs சச்சின் பைலட் மோதல் ஆரம்பித்து உள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி காரணமாகத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் முன்னரே ராஜஸ்தான் முதல்வர் பதவி சச்சின் பைலட்டிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

போர்க்கொடி
ஆனால் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய உள்ளதாகப் போர்க்கொடி தூக்கினர். மேலும், கெலாட் அரசை 2020இல் கவிழ்க்க முயன்ற சச்சின் பைலட் தலைமையை எப்படி ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். சத்தீஸ்கர் மாநிலத்திலும் கிட்டதட்ட இதே தான் நடந்து வருகிறது. அங்குத் தேர்தல் முடிந்த சமயத்திலேயே பூபேஷ் பாகேல் மற்றும் டிஎஸ் சிங்தேயோ இருவரில் யாருக்கு முதல்வர் பதவி என்று போட்டி ஏற்பட்டது.

சத்தீஸ்கர்
இறுதியில் பூபேஷ் பாகேல் முதல்வரானார். இரு தலைவர்களுக்கும் 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இதுவரை டிஎஸ் சிங்தேயோவுக்கு முதல்வர் பதவி வழங்கவில்லை. இது கட்சி தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் நிலையைப் பலவீனப்படுத்தியது. கெலாட்டின் ராஜஸ்தான் அரசைப் பல சமயங்களில் சச்சின் பைலட்டே விமர்சித்தார். அதேபோல சத்தீஸ்கர் அரசு கொள்கைகளை விமர்சித்து அமைச்சரவையில் இருந்தே சிங்டியோ விலகினார். இவை அனைத்தும் பாஜகவுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

பஞ்சாப்
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது ஒரு உதாரணம். டெல்லி தலைமையால் உட்கட்சி பிரச்சினையைச் சமாளிக்க முடிவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெற வைத்தவர் அமரீந்தர் சிங். 2019 மக்களவை தேர்தலிலும் பஞ்சாபில் 13இல் 8இல் காங்கிரஸ் வென்றது. இருந்த போதிலும் உட்கட்சி பூசல்கள் காரணமாக அமரீந்தர் சிங் கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட்டார். சித்து கொடுத்த அழுத்தம் காரணமாக அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தேர்தலுக்கு வெறும் 5 மாதங்களுக்கு முன்பு சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்ட போதிலும், அது தேர்தல் வெற்றியைக் காங்கிரசுக்குத் தரவில்லை.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணம். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் 2018இல் ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும், வெறும் 15 மாதங்களில் காங். ஆட்சி கவிழ்ந்தது. அங்கு சிந்தியா தொடர்ந்து தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனக் கூறி வந்தார். ஆனால் டெல்லி தலைமை இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் சிந்தியா தனது ஆதரவு 22 எம்எல்ஏக்களுடன் இணைந்து போர்க்கொடி தூக்கியதில் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக மீண்டும் முதல்வரானார்.

கர்நாடகா
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதும் அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். அங்குக் குமாரசாமி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்தது. இருப்பினும், வெறும் 14 மாதங்களில் வரிசையாகப் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகினார். இதனால் அங்கும் சில மாதங்களிலேயே கூட்டணி அரசு கவிழ்ந்தது. மீண்டும் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார். எடியூரப்பாவுக்குப் பின், பசவராஜ் பொம்மை முதல்வரானது தனிக்கதை.

நடவடிக்கை தேவை
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா, கேப்டன் அமரீந்தர் சிங், ஆர்.பி.என். சிங், ஜிதின் பிரசாதா, கபில் சிபல், அஸ்வனி குமார், ஹர்திக் படேல், இப்போது புதிதாகக் குலாம் நபி ஆசாத் போன்ற முக்கிய தலைவர்களைக் காங்கிரஸ் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தே தீர வேண்டும். புதிதாகத் தேர்வு செய்யப்படும் காங்கிரஸ் தலைவருக்கு இது தான் பெரிய வேலையாக இருக்கும். ஆனால், அதைச் செய்தால் மட்டுமே காங்கிரஸைக் காப்பாற்ற முடியும்.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications