கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது. கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 7வது முறையாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு மாநில அரசுகள் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மும்பையில் உள்ள ஜெயின் கோவில்களை திறக்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மும்பையில் உள்ள தாதர், பைகுல்லா மற்றும் செம்பூரில் உள்ள ஜெயின் கோவில்களை ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மக்களின் வழிபாட்டிற்காக திறக்க அனுமதி அளித்தது.
இந்த சலுகையானது வேறு எந்த கோவில்களுக்கோ, விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கோ பொருந்தாது. விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட கூறியுள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications