Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவை விடுங்க.. இந்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஜெர்மனி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் -1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இதனால் நம் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு வரும்படி சீனா, இங்கிலாந்து அழைத்து வரும் நிலையில் தற்போது ஜெர்மனியிலும் மவுசு கூடியுள்ளது. இந்தியர்களை தங்கள் நாட்டுக்கு வரும்படி இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். எச் 1பி விசா மூலமாக தான் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி செய்ய முடியும். ஆனால் அமெரிக்க நிறுவனங்களின் பணிகள் அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் என்ற கொள்கையால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

germany news Germany welcomes skilled Indians after Donald Trump s US H-1B visa fee increases German envoy Dr Philipp Ackermann has invited skilled Indians to work in Germany 1

அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தில் பயன்பெறுவோரில் 71 சதவீதம் இந்தியர்கள் தான். இதனால் இந்தியாவை குறிவைத்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதனால் இனி அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை சரியும்.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் எச் 1பி விசா கட்டண உயர்வை தொடர்ந்து இந்தியர்களை சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு வந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்து உள்ளன. அந்த வரிசையில் இப்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது. இந்தியா மற்றும் பூடான் நாட்டுக்கான ஜெர்மனி தூதராக இருக்கும் பிலிப் அக்கர்மேன் உள்ளார். இந்நிலையில் தான் அவர் ஜெர்மனிக்கு வரும்படி இந்தியர்களை அழைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். திறமையான இந்திய பணியாளர்களை ஜெர்மனிக்கு அழைத்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‛‛ஜெர்மனி தனது புலம்பெயர் கொள்கை, ஐடி, மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் தனித்து நிற்கிறது. ஜெர்மனியில் பணிபுரியும் இந்தியர், ஜெர்மானியரின் சராசரி வருமானத்தை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியர்கள் ஜெர்மனிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இதனால் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி நாங்கள் கடின உழைப்பு, சிறந்த மக்களுக்கு சிறப்பான வேலைகளை வழங்குவதில் நல்ல நம்பிக்கை வைத்துள்ளோம். இது மிகவும் திறமையான அனைத்து இந்தியர்களுக்குமான எனது அழைப்பாகும்'' என்றார். இதன்மூலம் திறமையான இந்தியர்கள் ஜெர்மனி வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறி அதற்கான இணையதள முகவரியையும் வழங்கி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+