"கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337 கோடி அபராதம்".. போட்டி ஆணையம் அதிரடி.. ஏன் தெரியுமா?
டெல்லி: ஆண்ட்ராய்டு தளம் மூலமாக கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக நுகர்வோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனத்துக்கு ரூ 1337 கோடி அபராதம் விதித்து போட்டி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இணைய தேடு பொறி நிறுவனங்களில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள நிறுவனம் கூகுள்.
இந்த நிறுவனம் செல்போன்களுக்கான ஓஎஸ் என்று சொல்லப்படும் இயங்குதளமான ஆண்ட்ராய்டு சேவையையும் கொடுத்து வருகிறது.

நுகர்வோர்கள் தரப்பில் புகார்
ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலம் ஆனது ஆண்ட்ராய்டுதான். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆண்ட்ராய்டு தளம் மூலமாக கூகுள் நிறுவனம் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக நுகர்வோர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

நியாயமற்ற வர்த்தக நடைமுறை
மொபைல் பயன்பாடு விநியோக ஒப்பந்தம் (MADA) மற்றும் Anti Fragmentation Agreement - என்ற இரு ஒப்பந்தங்களை பயன்படுத்தி கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாக புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

ரூ.1,337 கோடி ரூபாய் அபராதம்
இந்த நிலையில், கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1,337.76 கோடி ரூபாய் அபராதத்தை விதித்து இந்திய போட்டி ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களின் சூழலை பயன்படுத்திக்கொண்டு கூகுள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் நடந்துகொண்டதாகவும் இத்தகைய வர்த்தக நடைமுறையை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் கூகுள் தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய போட்டி ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நியாயமான வாய்ப்பை வழங்கவில்லை
மேலும் இது தொடர்பாக தனது விரிவான உத்தரவில் இந்திய போட்டி ஆணையம் கூறுகையில், ''மொபைல் பயன்பாடு விநியோக ஒப்பந்தத்தை பயன்படுத்தி கட்டாயமாக கூகுள் நிறுவனங்களின் செயலிகளை கட்டாயமாக முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்படுவதோடு அதை அன் இன்ஸ்டால் செய்வதற்கான எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. அதேபோல், இணைய தேடலிலும் கூகுள் தனது ஆதிக்க நிலையை வைத்து போட்டி நிறுவனங்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்கவில்லை'' என்று தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே..
இது பற்றி இந்திய போட்டி ஆணையம் மேலும் கூறும் போது, ''ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு நிறுவனங்களின் வர்த்தக மாதிரிகள் மறுபடுகின்றன. உயர்ந்த தரமான சாதனங்களை விற்பனை செய்வதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது. ஆனால், கூகுள் நிறுவனம் தனது பயனாளர்கலின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications