உதவி புரிய விரும்பிய சீனா.. தலையசைத்த இந்தியா.. ஆனா பாகிஸ்தானுக்கு மட்டும்.. இப்படி செய்யலாமா?
டெல்லி: சீனாவிலிருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்து விட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Recommended Video
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மக்களுக்கு தாங்க முடியாத சோகத்தை கொடுத்து வருகிறது.
நாடு முழுவதும் உயிரிழப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது? என்று தெரியாமல் இந்தியா தடுமாறி வருகிறது.

உதவும் உலக நாடுகள்
இந்தியாவின் பரிதாபமான நிலையை கண்டு உலக நாடுகள் போட்டி, போட்டு உதவி செய்து வருகின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, கனடா, பிரான்ஸ், அயர்லாந்து என பல்வேறு உலக நாடுகள் நமது நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. ''இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்'' என்று பல நாடுகள் கூறும் ஆறுதல் வார்த்தைகள் மக்களை தெம்பூட்டி வருகிறது.

சீனா ஆறுதல்
இந்த நிலையில் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானும், சமீபத்திய ஆண்டு எதிரியான சீனாவும், இந்தியாவுக்கு உதவும் விருப்பம் தெரிவித்துள்ளன. ''இந்தியாவின் தேவையைப் பொறுத்து எந்த நேரத்திலும் ஆதரவுக்கரம் நீட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்'' என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஏற்கனவே அறிவித்து விட்டார். ''இந்தியர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ஆறுதல் கூறி விட்டார்.

பாகிஸ்தானுக்கு தடை
சீனாவிலிருந்து ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதில் எந்த வித கருத்தியல் பிரச்சினையும் இல்லை என்றும் சீனாவுக்கு, மத்திய அரசு தலையசைத்து விட்டதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. அதே வேளையில் பாகிஸ்தானிடம் இருந்து வரும் உதவியை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொள்கையில் மாற்றம்
அவசர காலத்தில் உதவி பெறுவதற்காக இந்தியா 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது கொள்கையில் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முன்னர் உத்தரகாண்ட் பூகம்பம் (1991-ம் ஆண்டு), குஜராத் நிலநடுக்கம் (2001), மேற்கு வங்க புயல் (2002) மற்றும் பீகார் பெரு வெள்ளம் (2004) ஆகிய ஆண்டுகளில் இந்தியா வெளிநாடுகளின் உதவியை ஏற்றுக் கொண்டது.

மத்திய அரசு மறுப்பு
பின்னர் மோடி தலைமையில் பா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன் , 2013-ல் உத்தரகாண்ட் வெள்ளம், 2014-ல் காஷ்மீர் வெள்ளம் ஆகிய காலங்களில் வெளிநாட்டு உதவியை இந்தியா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு பெரு வெள்ளம் கேரளாவை சீரழித்தபோது, ஐக்கிய அரபு அமீரகம் வழங்குவதாக இருந்த ரூ.700 கோடியை வாங்க கேரள அரசு சம்மதம் தெரிவித்தது. ஆனால் இதற்கு தடை விதித்த இந்தியா, ''கேரளாவுக்கு தேவையான உதவியை நங்கள் செய்வோம்'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

பேரழிவில் இருந்து மீட்க வேண்டும்
தற்போது இந்த கொள்கைகளை தளர்த்திய இந்தியா, இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நாடுகளின் உதவியை பெற சம்மதம் தெரிவித்துள்ளது. உதவியையும் பெற்று வருகிறது. இந்த ஆபத்தான சமயத்தில் எதிரி நாடு, நட்பு நாடு என்ற பேதம் பார்க்காமல் அனைவரிடமும் உதவியை பெற்று நாட்டை பேரழிவில் இருந்து மீட்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications