டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க கொரோனா வைரஸ் தந்திரத்தை அரசு பயன்படுத்துகிறது - யோகேந்திர யாதவ்

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க கொரோனா வைரஸ் ஆயுதத்தை அரசு கையிலெடுத்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் தந்திரத்தை நாங்கள் முறியடிப்போம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி : விவசாயிகளின் போராட்டத்தையும் எதிர்ப்பையும் தணிக்க கொரோனா வைரஸை ஒரு ஆயுதமாக பயன்படுத்த அரசு முயற்சிக்கிறது என்று விவசாயிகள் சங்கத்தலைவர் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு இதே தந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினர். இந்த ஆண்டு நாங்கள் அதை நடக்க விடமாட்டோம் என்றும் யோகேந்திர யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் எதிர்ப்பைத் தணிக்க கொரோனா வைரஸை ஒரு தவிர்க்கவும் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. கடந்த ஆண்டு இதே தந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினர். டெல்லியின் சிங்கு எல்லையில் செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயி தலைவர் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 144 நாட்களாக போராடி வருகின்றனர். கடுமையான குளிர், மழை, வெயில் காலத்திலும் பின் வாங்காமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். டிராக்டர்களை குடியிருப்புகளாக பயன்படுத்தி தங்கிக் கொண்டு டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவி வருவதால் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில்தான் கொரோனா தடுப்பூசி மருந்துகள் அதிக அளவில் வீணாக்கப்பட்டுள்ளன- அதிர்ச்சி தகவல் தமிழகத்தில்தான் கொரோனா தடுப்பூசி மருந்துகள் அதிக அளவில் வீணாக்கப்பட்டுள்ளன- அதிர்ச்சி தகவல்

கோரிக்கை ஏற்க மறுப்பு

கோரிக்கை ஏற்க மறுப்பு

மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். டெல்லியின் எல்லைகள் முதல் நாட்டின் பிற பகுதிகள் வரை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான் விவசாயிகளின் போராட்டங்கள் முடிவடையும் என்று போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் விவசாயிகள் சங்க அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தொடர் போராட்டம்

விவசாயிகள் தொடர் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 144வது நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அரசு தந்திரம்

அரசு தந்திரம்

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் வரும் 26ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள விவசாயிகள், தங்களின் போராட்டத்தையும் எதிர்ப்பையும் தணிக்க கொரோனா வைரஸை ஒரு ஆயுதமாக பயன்படுத்த அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

நடக்க விட மாட்டோம்

நடக்க விட மாட்டோம்

கடந்த ஆண்டு இதே லாக்டவுன் தந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினர். இந்த ஆண்டு நாங்கள் அதை நடக்க விடமாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். டெல்லியின் சிங்கு எல்லையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பேரணிகள் நடக்கிறது

தேர்தல் பேரணிகள் நடக்கிறது

கொரோனா வைரஸ் குறித்த அரசாங்கத்தின் பாசாங்குத்தனம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களும் தலைவர்களும் தேர்தல் பேரணிகளை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை கேள்வி கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் கூறினார்.

ஆம்புலன்ஸ் வசதி

ஆம்புலன்ஸ் வசதி

தடுப்பூசிகளை எடுக்க விரும்புவோருக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தும் அனைத்து இடங்களிலும் நோய்த்தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன, எல்லைகளில் சுகாதார வசதிகள் அதிகரிகப்பட்டு வருவதாகவும் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Farmers have accused the government of using the corona virus weapon to suppress the farmers' struggle. The farmers have said that we will defeat the government's ploy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X