நாடு முழுவதும் மீண்டும் தீவிர ஊரடங்கு.. மத்திய அரசு எச்சரிக்கை.. பின்னணி என்ன!
டெல்லி :சிம்லா, மணாலி உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மலை வாசல் தளங்களில் மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காமல் அலைமோதுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, கொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு போடப்படும் என்று எச்சரித்துள்ளது,.
மக்கள் கூட்டம் அலைமோதுவதுடன் சிம்லா மற்றும் மணாலியில் கொரோனா விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மத்திய சுகாதார அமைச்சகம் இமாச்சல பிரதேச அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாம்.
தரைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். வெப்பம் மற்றும் கடுமையான புழுக்கத்தை அனுபவித்து வந்த அவர்கள், ஊரடங்கில் தளர்வு மற்றும் மலைவாசல் தளங்கள் திறப்பால் உற்சாகம் அடைந்து அங்கு குவிந்து வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள்
நாடு முழுவதும் மலைவாசல் தளங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக சிம்லா, குலு-மணாலி மற்றும் தர்மஷாலா போன்ற பகுதிகளுக்கு அதிகம் பேர் குவிய தொடங்கி உள்ளனர். நமது மாநிலத்தில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் நேற்று முதல் திறக்கப்பட்டதால் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மணாலி
சிம்லா மற்றும் மணாலியில் குவியும் மக்கள் கூட்டத்தை பார்த்து கவலை அடைந்த ஐ.சி.எம்.ஆரின் டி.ஜி. டாக்டர் பால்ராம் பார்கவா, கொரேதானா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.

தீவிர ஊரடங்கு
சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வாலும், மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும் மக்கள் கொரோனான தொடர்பான நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நிலைமை விபரீதம் ஆகும் என்றும் மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்தார்.

இ-பாஸ் ஆய்வு
ஜூன் இரண்டாவது வாரத்தில் கோவிட் -19 கட்டுப்பாடுகளை இமாச்சலப் பிரதேச அரசு தளர்த்திய பின்னர், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கினர், குறிப்பாக சிம்லா, குலு-மணாலி மற்றும் தர்மசாலா. எல்லைகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பிற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது இ-பாஸை ஆய்வு செய்யவே முடியாத அளவிற்கு கூட்டம் தாறுமாறாக கூடியது. வாகனங்களின் அதீத வருகையால் திணறிப்போன போலீசார், ஒன்றும் செய்யமுடியாமல் அப்படியே அனுப்பும் நிலையில் இருக்கிறார்கள்.

கடும் எச்சரிக்கை
சிம்லா காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா, கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை வற்புறுத்தி உள்ளார்., மீண்டும் மீண்டும் மீறல்கள் ஏற்பட்டால் எட்டு நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார். முககவசம் அணிவது, கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கட்டுபட வேண்டும என்று ஹோட்டல் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பரில் வரலாம்
இருப்பினும், சுகாதார வல்லுநர்கள் உ மூன்றாவது அலை விரைவில் நாட்டைத் தாக்கும் என்று எச்சரிக்கின்றனர், இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும். மூன்றாவது அலை ஆகஸ்ட் நடுப்பகுதியில் இந்தியாவைத் தாக்கும் என்றும், செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருக்கக்கூடும் என்றும் எஸ்பிஐ ஆராய்ச்சி சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது. எஸ்பிஐயின் முந்தைய அறிக்கை மே மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் இரண்டாவது தொற்றுநோய்களின் உச்சத்தை எட்டக்கூடும் என்று கணித்தது. அந்த கணிப்பாக துல்லியமாக நடந்தது. இதனால் இப்போது அதுபோல் நடக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் வந்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த கூட்டங்கள் விதைத்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications