சாப்பாடு பரிமாற தாமதம்.. மணமகளுக்கு மாப்பிள்ளை கொடுத்த வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
டெல்லி: இருந்தாலும் கடலமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுபா என்பது போல்.. ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உறவினர்களுக்கு சாப்பாடு பரிமாற தாமதம் ஆனதால் கோபம் அடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டார். மணமகளுக்கு பதில் வேறு ஒரு பெண்ணை மணந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் போலீசில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் மெஹ்தாப் என்ற இளைஞருடன் அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் விழா கடந்த டிசம்பர் 22ம் தேதி மணமகள், மணமகனின் உறவினர்கள் சூழ உற்சாகமாக நடந்தது. அப்போது மணப்பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளை குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர், பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறினர். இருப்பினும், மணமகனின் உறவினர் ஒருவருக்கு ரொட்டி(உணவு) தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தனக்கு உணவு தாமதமாக கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த மணமகனின் உறவினர் திருமண விழாவில் கூச்சலிட்டார். இதனால் திருமண வீடே களோபரம் ஆனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தினர், மணமகன் தரப்பைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மணமகனின் உறவினர்களோ. மணமகளின் குடும்பத்தினரைக் குற்றம் சாட்டி பாதியிலேயே வெளியேறினார்கள். இதனிடையே விடிந்தால் திருமணம் என்கிற நிலையில். மணமகன் இரவில் காணாமல் போனார். சிறிது நேரத்திற்கு பிறகு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு மண்டபத்திற்கு வந்தார்.
இந்த செய்தி மணமகளின் குடும்பத்தின் காதுக்கு போனது. இதை கேட்டு மணமகள் உள்பட அவரது குடும்பத்தினர் ஆடிப்போனார்கள்.. இதையடுத்து மணமகள் சார்பில் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தனர். ஆனால் மணமகளின் புகாரின் மீது காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து டிசம்பர் 24 அன்று சந்தோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மணமகள் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
அந்த புகாரில். மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக தரப்பப்பட்ட ரூ.1.5 லட்சம் உட்பட ரூ.7 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும், அதனை பெற்றுத்தர வேண்டும் என்றும் என்றும் திருமணம் செய்வதாக ஏமாற்றியது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் மணமகன் உள்பட 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மணமகள் சந்தோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய மணமகளின் சகோதரர் ராஜு, சந்தோலி மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் உறுதியளித்தார். காவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். ஆனால் உள்ளூர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications