டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஓவரா குளிருது.. ஜெயிலில் அடம்பிடிக்கும் சைக்கோ கொலையாளி அப்தாப்..ஏடிஎம் கார்டும் வேணுமாம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டையே உலுக்கிய ஷ்ர்த்தா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்தாப் அமீன் டெல்லி திகார் சிறையில் குளிர் வாட்டி வதைப்பதாகவும் குளிரை தாங்கும் வகையில் உடைகள் வாங்க தனக்கு கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தனது வக்கில் மூலமாக மனு தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மநிலம் வசாய் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வாக்கர். இவர் கடந்த ஆண்டு டெல்லியில் தனது காதலன் அப்தாப் அமீனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

டெல்லியில் லிவிங் டூகெதர் முறையில் வசித்து வந்த போது சண்டை ஏற்பட்டதால் அப்தாப் அமீன் ஷரத்தாவை கொடூரமாக கொலை செய்ததுடன் கொலையை மறைக்க அப்தாப் செய்தவை அனைத்தும் சினிமா கிரைம் திரில்லரை மிஞ்சும் வகையில் இருந்தது.

ஷ்ரத்தா கொலை வழக்கு.. நார்கோ டெஸ்டில் டாக்டர்களையே முட்டாளாக்க நினைத்த அப்தாப் ஷ்ரத்தா கொலை வழக்கு.. நார்கோ டெஸ்டில் டாக்டர்களையே முட்டாளாக்க நினைத்த அப்தாப்

ஷ்ரத்தா கொலை வழக்கு

ஷ்ரத்தா கொலை வழக்கு

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை இந்த வழக்கு ஏற்படுத்தியது. அதாவது ஷ்ரத்தா உடலை 36 துண்டுகளாக வெட்டி உடலை புதிதாக வாங்கிய பிரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொரு பாகங்களாக டெல்லி வனப்பகுதியில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சைக்கோ கொலையாளி போல அப்தாப் அமீன் நடந்து கொண்ட சம்பவம் டெல்லி போலீசாரையே திடுக்கிட வைக்கும் வகையில் இருந்தது. நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிறையில் அடைக்கப்பட்ட அப்தாப்

சிறையில் அடைக்கப்பட்ட அப்தாப்

ஷ்ரத்தாவின் உடலை வீட்டில் வைத்திருக்கும் போதே டேட்டிங் ஆப் மூலமாக பல பெண்களுடன் பழகி அவர்களை தனது வீட்டிற்கே அப்தாப் அழைத்து வந்ததோடு அவர்களுடன் ஜாலியாக இருந்த தகவலும் கேட்டு போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது. ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாருக்குப் பிறகு இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கைதான அப்தாப், தற்போது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அப்தாப் அமீனிடம் ஷர்த்தா கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

போர்வை, கம்பளி வாங்க..

போர்வை, கம்பளி வாங்க..

இந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப், கடுமையான குளிரில் அவதிப்படுவதாகவும் குளிரை தாங்கக் கூடிய போர்வைகள் மற்றும் கம்பளிகள் வாங்குவதற்காக தனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி டெல்லி மெட்ரோபோலிடன் மாஜிஸ்திரேட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்தாப் அமீனின் வழக்கறிஞர் எம்.எஸ். கான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கிரெடிட் கார்டை வழங்க வேண்டும்

கிரெடிட் கார்டை வழங்க வேண்டும்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "அப்தாப் அமீன் டெல்லியில் நிலவும் கடும் குளிரால் அவதிப்படுகிறார். குளிரை தாங்க கூடிய போதிய உடைகள் அவரிடம் இல்லை. எனவே, அவசர தேவைகளுக்காகவும் தினசரி பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே தற்போது போலீஸிடம் இருக்கும் அப்தாப் அமீனின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை அவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். அப்தாப் அமீனின் குடும்பத்தினருடன் அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டதால் அவருக்கு பணம் கிடைக்க வேறு வழியில்லை" என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

டி.என்.ஏ சோதனை முடிவுகள்

டி.என்.ஏ சோதனை முடிவுகள்

இதனிடையே, டெல்லியின் வனப்பகுதியில் இருந்து மீட்கபட்ட எலும்பு மற்றும் தலை முடி ஆகியவற்றை டி.என்.ஏ சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். இந்த டி.என்.ஏ சோதனையில், டெல்லி வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட எலும்பு மற்றும் தலைமுடி உள்ளிட்டவைகள் ஷரத்தாவினுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸ் கூறுகையில், "ஷ்ரத்தா கொலை வழக்கில் டி.என்.ஏ சோதனை முடிவுகள் வந்துள்ளன. இதில் ஒரு எலும்பு மற்றும் தலைமுடி ஷ்ரத்தாவின் தந்தை , சகோதரரின் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறது: என்றனர். ஷர்த்தா கொலை வழக்கில் அப்தாப் அமீனுக்கு எதிராக முக்கிய தடயமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Aftab Amin, who has been arrested and imprisoned in the Sharda murder case that shook the country, has filed a petition in the court that he is suffering from cold in Delhi's Tihar jail and that he should be given credit cards and debit cards to buy clothes to withstand the cold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X