தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு; கிரேட் 1 அரசு வேலை.. ஹரியானா அரசு அறிவிப்பு!
டெல்லி: டோக்யோ ஒலிம்பிக் 2020 போட்டித் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
Recommended Video
அதே போல தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். இந்திய விளையாட்டு துறையில் புதிய சரித்திரம் எழுதியுள்ள நீரஜ் சோப்ராவின் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள நீரஜ் சோப்ரா வீட்டின் முன் மக்கள் தேசியக் கொடியுடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்திலும் பணிபுரிந்து வந்தததால் ராணுவ வீரர்களும் அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தில் இருந்தது. நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொடுத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு ரூ.6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.மேலும், மாநில அரசின் கிரேட் 1 அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications