வெறுப்பு.. வன்முறை.. இந்தியர்களே உஷாரா இருங்க.. கனடா நாட்டு பதற்றத்தால் மத்திய அரசு பரபர அறிக்கை
டெல்லி: கனடாவில் மதவெறி சார்ந்த வன்முறைகள், வெறுக்கத்தக்க வகையிலான குறு்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதால் அங்கு வசிக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் தூதரங்களில் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கி உள்ளது.
கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் இந்தியாவில் உள்ள பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக்கோரி வருகின்றனர். இதன் அடுத்தக்கட்டமாக அவர்கள் அங்கு வாக்கெடுப்பு நடத்தி வருகின்றன.
செப்டம்பர் 19ல் ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் காலிஸ்தான் ஆதரவு குழு ஏற்பாடு செய்த வாக்கெடுப்பில் 1 லட்சம் கனடாவின் சீக்கியர்கள் ஓட்டளித்தனர். மேலும் அவர்கள் ஓட்டளிக்க வரிசையில் நிற்கும் வீடியோக்கள் வெளியாகின.

மத்திய அரசு கடும் எதிர்ப்பு
இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீக்கிய பிரிவினை அமைப்புகளின் இத்தகைய நடவடிக்கை பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி விமர்சனம் செய்திருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதோடு இந்த செயல்பாடு என்பது ‛கேலித்தனமானது' என சாடியிருந்தார் இந்நிலையில் தான் கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் கனடாவில் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு அறிக்கை
இதனால் கனடா நாட்டின் நடக்கும் விஷயங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கனடாவில் வசிக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவருக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உஷாராக இருங்க...
‛‛வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தூதரகம் வாயிலா அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன்பு நிறுத்தப்படவில்லை. அதிகரிக்கும் குற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்திய மக்களும், மாணவர்களும் இந்தியாவிலிருந்து கனடாவுக்குச் செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே அங்கே வாழும் இந்திய மாணவர்களும், இந்தியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

விபரங்களை பதிவு செய்யுங்க..
இதனால் கனடாவில் உள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரன்டோ, வான்கூரில் உள்ள தூதரகங்களில் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏதேனும் அவசரநிலை ஏற்படும்போது உங்களால் துணைத் தூதரகம், தூதரக ஜெனரலுடன் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications