டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு மேலும் ஒரு தடுப்பூசி.. ஜூனில் களமிறக்கும் சீரம் நிறுவனம்

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா வைரசுக்கு எதிராக கோவோவேக்ஸ் என்ற மேலும் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என சீரம் இன்ஸ்டிட்யூட் இந்தியாவின் சிஇஓ அதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய தடுப்பு மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்ட்யூட் ஆப் இந்தியா நிறுவனம், அமெரிக்க தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் என்ற மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்து 89.3 சதவீதம் நல்ல பலனை தருவதாக ஐரோப்பாவில் நடத்தப்பட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து இந்தியாவிலும் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளது.

Hope To Launch Covovax By June 2021: Serum Institutes Adar Poonawalla

இது பற்றி அதர் பூனவாலா தனது டுவிட்டர் பதிவில், கோவிட் 19 க்கு எதிராக நாங்கள் கண்டுபிடித்துள்ள நோவாவேக்ஸ் சிறப்பாக பலனை தந்துள்ளது. இதனை சோதனை செய்யும் பணியை இந்தியாவிலும் துவங்கி விட்டோம். 2021 ஜூன் மாதத்தில் இது விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே டோஸ் மட்டும் போதும்... கொரோனாவுக்கு எதிராக 66% தடுப்பாற்றல்... அசத்தும் ஜான்சன் & ஜான்சன்ஒரே டோஸ் மட்டும் போதும்... கொரோனாவுக்கு எதிராக 66% தடுப்பாற்றல்... அசத்தும் ஜான்சன் & ஜான்சன்

முன்னதாக இம்மாத துவக்கத்தில் சீரம் இந்தியா தயாரித்த 2 மருந்துகளுக்கு டிசிஜிஐ ஒப்புதல் வழங்கி உள்ளது. கோவிசில்ட் மருந்துகளை ஐதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் கோவேக்சின் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு, பிரிட்டிஷ் ஸ்வீடிஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்திருந்தது.

விரைவில் மாதத்திற்கு 40 முதல் 50 மில்லியன் டோஸ் மருந்துகளை தங்கள் நிறுவனம் தயொரிக்க உள்ளது. இந்த நோவாவேக்ஸ் தடுப்பு மருந்து, 95.6 சதவீதம் தற்போதுள்ள கொரோனா வைரசையும், 85.6 சதவீதம் ஐரோப்போவில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் வகையையும் தடுக்க கூடியதாக இருக்கும் என ஏற்கனவே அதர் பூனவாலா தெரிவித்திருந்தார்.

English summary
Serum Institute of India, is hopeful of launching Covovax - developed in partnership with American vaccine developer Novavax - by June, its CEO Adar Poonawalla said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X