வேண்டாம்.. விட்டுடுங்க.. கெஞ்சிய மாணவிகள்.. துரத்தி துரத்தி நடத்தப்பட்ட தாக்குதல்.. ஜேஎன்யூ கொடூரம்!
ஜேஎன்யூவில் நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அதிர வைக்கும் தகவல்கள், விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: ஜேஎன்யூவில் நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அதிர வைக்கும் தகவல்கள், விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில் பெண்கள் விடுதியில் புகுந்து மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாடு காரணமாக டெல்லி ஜேஎன்யூ எப்போது பிரபலமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

கும்பல்
இந்த தாக்குதலின் போது முகமூடி அணிந்த கும்பல், பெண்கள் விடுதிக்குள் நுழைந்தும் கூட தாக்குதல் நடத்தி உள்ளார். சில பெண்களும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். அங்கு இருக்கும் சபர்மதி ஹாஸ்டலில் இரவு முழுக்க இப்படி தாக்குதல் நடந்துள்ளது.

எங்கு விடுதி
விடுதிக்குள் இருந்த பெண்கள், கதவுகளை சாத்திக் கொண்டு, உள்ளேயே இரவு முழுக்க இருந்துள்ளனர். இந்த கும்பல் முதலில் தாக்க வந்த போது, அங்கிருந்த பெண்கள் அவர்களை தடுத்துள்ளனர். அதை கேட்கவில்லை என்றதும், அவர்களிடம் கெஞ்சி இருக்கிறார்கள்.

கேட்கவில்லை
ஆனால் அதையும் கேட்காமல் தொடர்ந்து மாணவர்கள் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. மிகவும் கூர்மையான, வலுவான ஆயுதங்களை வைத்து தாக்கி இருக்கிறார்கள். பெண்கள், ஆண்கள் , ஆசிரியர்கள் என்று எந்த விதமான பாகுபாடும் இன்றி தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண்கள் அழுதுகொண்டே நின்றும் கூட இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

பெண்கள் தாக்குதல்
பெண்களும் கூட இவர்களுடன் சேர்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதுதான் இதில் கொடூரமான விஷயம். இந்த கொடூரமான தாக்குதல் குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. மோசமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு வீடியோ எடுப்பவர்கள் தொடங்கி எல்லோரையும் இவர்கள் தாக்கி வந்தது அதில் பதிவாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications