வெறும் ரூ.1000 முதலீடு செய்து ரூ.20 லட்சத்தை அள்ளிய நபர்! அதுவும் ஒரே நாளில்.. இது எப்படி சாத்தியம்?
டெல்லி: பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ததன் மூலம் ஒரு நபர் வெறும் ரூ.1000ஐ முதலீடு செய்து ஒரே நாளில் ரூ.20 லட்சத்தைச் சம்பாதித்து இருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி இதைச் செய்தார் என்பதைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் கடந்த காலங்களில் பங்குச்சந்தை வர்த்தகம் என்பது பெரியளவில் இருக்காது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு பலரும் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இருப்பினும், முறையாகச் செய்யவில்லை என்றால் பங்குச்சந்தையில் பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். ஆனால், சரியாகச் செய்தால் ஈஸியாக லாபத்தையும் அள்ளிவிடலாம் .
லாபம்: அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பங்குச்சந்தையில் ஒரு நபர் தனது ஒரே ஒரு வர்த்தகத்தின் மூலம் பல லட்சத்தை லாபமாக சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர் எப்படி இதைச் செய்தார்.. இதில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் ஃப்யூச்சர்ஸில் டிரேடிங் செய்வோர் கால் மற்றும் புட் ஆப்ஷன் மூலம் டிரேட் செய்வார்கள். வரும் காலத்தில் ஒரு பங்கின் விலை எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்தால் இதில் நம்மால் லாபத்தைச் சம்பாதிக்க முடியும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பங்குகள் விலை அதிகரிக்கும் எனக் கருதினால் கால் ஆப்ஷனில் பங்கை வாங்க வேண்டும். பங்கு விலை குறையும் என்று கருதினால் புட் ஆப்ஷனில் வாங்க வேண்டும்.
என்ன நடந்தது: அப்படி தான் இங்கு யாரோ ஒரு வர்த்தகர் கோடக் மஹிந்திரா வங்கியின் 18 லாட்களை புட் ஆப்ஷனில் வாங்கி இருக்கிறார். இந்தச் சூழலில் தான் கோடக் வங்கிக்கு கடந்த புதன்கிழமை ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்தன. புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைனில் சேர்க்கவும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் கோடாக் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
இந்த தடையால் கோடாக் வங்கியின் பங்குகள் சுமார் 12% சரிந்தன. விலை இந்தளவுக்கு சரிந்ததாலேயே புட் ஆப்ஷனில் பங்கை வங்கிய அந்த நபருக்கு லாபம் கொட்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் புட் ஆப்ஷன் கடைசி வியாழன் அன்று ஸ்டிரைக் ஆகும். அதன்படியே கடந்த வாரம் இது ஸ்டிரைக் ஆன நிலையில், அந்த நபர் லாபத்தை அள்ளி இருக்கிறார்.
20 லட்சம் லாபம்: இது குறித்த தகவல்களை OptionsAlgos-Quanta என்ற ஒரு டிரேடிங் ட்விட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது. கோடாக் வங்கியின் புட் ஆப்ஷனை ஒருவர் கடைசி நேரத்தில் வாங்கியதாகவும் இதன் மூலம் அவர் வெறும் ₹ 1,000 முதலீடு செய்து ஒரே நாளில் சுமார் ₹ 20 லட்சம் லாபத்தைச் சம்பாதித்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
எப்படி: பொதுவாக இந்த கால் மற்றும் புட் ஆப்ஷன் அது காலாவதியாகும் போது பூஜ்ஜியத்தை நெருங்கும். அதன்படியே அது 20 பைசாவுக்கு டிரேட் ஆகியுள்ளது. அப்போது தான் அதை அவர் வாங்கி இருக்கிறார். மறுநாள் அந்த பங்கின் விலை ரிசர்வ் வங்கி உத்தரவால் கிடுகிடுவென சரிந்துள்ளது. புட் ஆப்ஷனில் பங்குகள் சரிந்தால் லாபம் கிடைக்கும் என்பதால் இவர் மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதித்து இருக்கிறார். அதேநேரம் இது இன்சைடர் டிரேடிங், அதாவது கோடாக் நிறுவனத்தில் வேலை செய்த நபரே இதை வாங்கி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இன்சைடர் டிரேடிங் என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications