குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? முழு விவரம் இங்கே
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா களம் காண்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் ஜூலை 21ம் தேதி அறிவிக்கப்படுகிறது. அதே போல குடியரசுத் துணைத்தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்த தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கின்றனர்.

எலக்டோரல் காலேஜ்
இவர்கள் எலக்டோரல் காலேஜ் என அழைக்கப்படுகின்றனர். இந்த வாக்காளர் குழுமத்தில் 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் என 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 4,809 எம்எல்ஏக்களும் அடங்கியுள்ளனர். இவர்கள்தான் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் சட்ட மேலவை உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. அதேபோல நியமன எம்.பிக்களும் வாக்களிக்க முடியாது.

தேர்தல்
குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு போட்டியிடும் நபர் 35 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்குரிய தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். இது இவ்வாறு இருக்க வாக்களிக்கும் முறை மற்றும் வாக்கு மதிப்புகள் மாறுபடுகின்றன. 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

கணக்கீடு
ஒரு மாநில எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மற்ற மாநில எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பை விடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கலாம். இது அந்தந்த மாநில மக்கள் தொகையின் எண்ணிக்கையை பொருத்து அமைகிறது. அதாவது தமிழ்நாட்டு எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பானது உத்தரப் பிரதேச எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பை விட குறைந்ததாகும்.

மதிப்பு என்ன?
அதன்படி தமிழ்நாட்டின் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். எனவே மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 176 X 234 = 41,184 ஆகும். உத்தரப்பிரதேசத்தின் வாக்கு மதிப்பு 208 ஆகும். இவ்வாறு கணக்கிட்டால் ஒட்டு மொத்த வாக்காளர் குழுவின் வாக்கு மதிப்புகள் 10,86,431 ஆக உள்ளது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 708 என நிலையானதாக இருக்கும்.

எம்எல்ஏக்கள்
எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பை இப்படி புரிந்துகொள்ளலாம். 'மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

போட்டியாளர்கள்
இப்படியான நிலையில் போட்டியாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள எம்.பிகளுக்கு பச்சை நிற சீட்டும் எம்எல்ஏக்களுக்கு சிவப்பு நிற சீட்டும் வழங்கப்படும்.இதை கொண்டு வாக்களிக்கலாம். தேர்தல் முடிகள் யார் அதிக வாக்குகளை பெற்றார்கள் என்பதைவிட குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை கடந்தவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

வாக்குகள்
ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவை இல்லாததால் குடியரசுத் தலைவர் தேர்தலில் 708ஆக இருக்கும் எம்.பிக்களின் வாக்கு மதிப்பு இம்முறை 700 ஆகக் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையமானது ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் மாநிலங்களவை மற்றும் மக்களவை செகரட்டரி ஜெனரலை நியமிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்தலை மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் நடத்துவார்.

பின்னணி
தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிப்படி இந்த தேர்தலானது நாடாளுமன்ற வளாகத்திலும் சட்டமன்ற வளாகத்திலும் நடைபெறும். அதேபோல இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. பாரம்பரிய முறைப்படியான வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும். இதில் தேர்தல் ஆணையம் வழங்கும் சிறப்பு பேனாவைத்தான் வாக்காளர்கள் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்.

முடிவு
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலை பொறுத்த அளவில் போட்டியாளர் குறைந்தது 20 வாக்காளர்களால் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். அதேபோல 35 வயதை கடந்திருத்தல் அவசியமாகும். மாநிலங்களவை உறுப்பினராவதற்குரிய தகுதிகளையும் அவர் பெற்றிருக்க வேண்டும். அரசு பணிகளில் இருக்கக்கூடாது. இதில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
இரு அவைகளின் பலத்தின் அடிப்படையில் குடியரசுத் துணைத்தலைவராக தேர்வாக 393 வாக்குகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications