"எனது வெற்றிக்கு பகவத்கீதையே காரணம்.." ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கர்.. சொன்ன சீக்ரெட்
டெல்லி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் மனு பாக்கர் வரலாற்றின் தனது பெயரைப் பொறித்துள்ளார். ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கிடையே தான் பதக்கம் வெல்ல பகவத்கீதையே காரணம் என அவர் கூறியிருக்கிறார். அவரது பேச்சு இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பிரான்ஸில் நடக்கும் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் வென்றுள்ளார். இதற்கு முன்பு இந்தியா சார்பில் களமிறங்கிய ஆண்களே துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில், மனு பாக்கர் அந்த வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறார். வெறும் 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார்.

துப்பாக்கி சுடுதல்: மேலும், லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு 12 ஆண்டுகள் இந்தியாவுக்குத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் எதுவும் கிடைக்காத நிலையில், அதையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இந்தியா கடைசியாக 2012 லண்டன் பதிப்பில் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பதக்கங்களை வென்றது.. அங்கே ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டர் விஜய் குமார் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
அதன் பிறகு 12 ஆண்டுகளுக்குப் பிறகு 22 வயதான மனு பாக்கர் வெண்கலம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்திய அணி பதக்க பட்டியலில் நுழைந்துள்ளது. ஒரு வெண்கலத்துடன் இந்திய அணி இப்போது 17ஆவது இடத்தில் இருக்கிறது. இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிகளில் தான் பதக்கம் வெல்ல பகவத் கீதை காரணமாக இருந்துள்ளதாக மனு பாக்கர் கூறுகிறார்.
அதிக பதக்கங்கள்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம் இது.. நான் அதற்கான ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன் என்றே சொல்ல வேண்டும். இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களைப் பெறத் தகுதியானது. இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறோம்.
தனிப்பட்ட முறையில் என்னால் இது நம்பவே முடியவில்லை. நான் கடைசி ஷாட் வரை நம்பிக்கையைக் கைவிடவில்லை.. தொடர்ந்து முயன்றேன். இந்த முறை வெண்கல பதக்கம் தான் கிடைத்தது. அடுத்த முறை தங்கம் வெல்வேன்" என்றார்.
பகவத் கீதை: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியின் கடைசி சில நிமிடங்கள் எப்படி இருந்தது.. அதை எப்படிக் கையாண்டீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. நான் பகவத் கீதையை எப்போதும் படிப்பேன்.. அது எனது மனதிலேயே இருந்துவிட்டது. நீ எதைச் செய்ய வேண்டுமா அதை மட்டும் செய் என்ற பகவத் கீதை வரி தான் எனக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.
ஒலிம்பிக் போட்டி: ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர்- பிரதமர் மோடி வாழ்த்து!
உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.. மற்றதை விட்டுவிடுங்கள். விதியை உங்களால் மாற்றவே முடியாது இதுதான் எனது மனதில் ஓடியது. நீங்கள் கர்மாவில் கவனம் செலுத்த வேண்டும்.. இதனால் என்ன கிடைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது.. அதுவே எனது மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
நெகிழ்ச்சி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதில் இருந்து மீண்டு வரத் தாமதம் ஆனது. ஆனால், போனவை போகட்டும்.. அது கடந்த காலம்.. இனி நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவோம் என்று முடிவு செய்தேன். மேலும், இந்த பதக்கம் என்பது டீம் வோர்க் தான்.. நான் வெறும் கருவி மட்டுமே" என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications