அப்படி போடு.. குட்நியூஸ்.. கேரளாவில் வீழ்ந்தது கொரோனா அலை.. நாடு முழுக்க குறையப்போகிறதாம்!
டெல்லி: இந்தியாவில் சமீப காலங்களில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், வரும் காலத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2019இல் ஆரம்பித்த கொரோனா, அதன் பிறகு உலக நாடுகளை வைத்துச் செய்துவிட்டது. சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா பாதிப்பு அமெரிக்கா தொடங்கி எந்தவொரு நாட்டையும் விட்டுவைக்கவில்லை.

அதன் பிறகு கொரோனா வேக்சின், முன்னெச்சரிக்கை பணிகளுக்குப் பின்னரே கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்தது. உலகம் மாஸ்க்கை தவிர்த்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.
கொரோனா பாதிப்பு: இதற்கிடையே கடந்த சில காலமாகவே இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 4,423இல் 4,334 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்புகள் என்று வரும் போது நமது நாட்டில் ஒரே நாளில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 4 பேரும் மகாராஷ்டிராவில் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
Kerala Covid cases trend, on the path of decline. The current Covid surge in Kerala hasn't caused any impact in Kerala and now declining, this would be the trend in other states as well. #JN.1 pic.twitter.com/PC5TtPPm06
— Vijayanand - Covid Data Analyst (@vijay27anand) January 4, 2024
உலக சுகாதார அமைப்பு: தற்போது இந்தியாவில் கொரோனா அதிகரிக்க புதிய ஜேஎன் 1 கொரோனா தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார அமைப்பும் கூட இந்த வகை கொரோனாவை கவனிக்க வேண்டிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 511 பேருக்கு ஜேஎன் 1 கொரோனா பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் அதிகபட்சமாக 199 ஜேஎன் 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து கேரளாவில் 148 பேருக்கும் கோவாவில் 47 பேருக்கும் புதிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
BA.2.86 அல்லது பைரோலா என்ற ஓமிக்ரான் பாதிப்பே இந்த ஜேஎன் 1 வேரியண்ட்டாக உருமாறி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் கடந்த செப். மாதம் இந்த புது வகை கொரோனா வகை கண்டறியப்பட்ட நிலையில், இப்போது உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
கேரளாவில் அதிகம்: கேரளாவைப் பொறுத்தவரைக் கடந்த டிச.10ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. மெல்ல வைரஸ் பாதிப்பு 100ஐ தொட்ட நிலையில், 12ஆம் தேதி 200ஐ தாண்டியது. அதேபோல டிச.16ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 300ஐ நெருங்கியது. அதிகபட்சமாக டிச. 22ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 600ஐ நெருங்கியது. இதனால் இந்தியாவில் எங்கு அடுத்து ஒரு கொரோனா அலை ஏற்படுமோ என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
ஆனால், அதன் பிறகு வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஜன.3ஆம் தேதி கேரளாவில் வைரஸ் பாதிப்பு 200என்ற ரேஞ்சில் குறைந்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் வைரஸ் பாதிப்பு எப்படி பெரியளவில் அதிகரிக்கவில்லையே.. நாடு முழுக்கவும் அதேபோல வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கோவிட் டேட்டா பகுப்பாளர் விஜயானந்த் தெரிவித்துள்ளார்.
இதுதான் நடக்கும்: இது குறித்து விஜயானந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "கேரளா கொரோனா கேஸ் டிரெண்டை பார்க்கும் போது, அது சரிந்து வருவது தெரிகிறது. கேரளாவில் தற்போது ஏற்பட்ட கொரோனா எழுச்சி அங்கே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. கேரளாவில் இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, மற்ற மாநிலங்களிலும் இதே டிரெண்ட் தான் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications