ராஜ்யசபா எம்.பி.யாகி மத்திய அமைச்சராக காத்திருந்த மனோஜ் சின்ஹா.. திடீரென காஷ்மீர் ஆளுநராக நியமனம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிம் மனோஜ் சின்ஹா மத்திய அமைச்சராவோம் என எதிர்பார்த்திருந்ததாக பாஜக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக இருந்த முர்மு தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய துணை நிலை ஆளுநர் யாராக இருக்கும் என்பது குறித்து யூகங்கள் வெளியாகின.
இந்த யூகங்களில் மனோஜ் சின்ஹாவின் பெயர் இல்லை. இன்று காலையில்தான் ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பை பார்த்தே மனோஜ் சின்ஹா என்கிற பெயரை ஊடகங்களும் அரசியல் உலகமும் உச்சரித்தது.

நட்டாவின் வியூகம்
மனோஜ் சின்ஹாவைப் பொறுத்தவரை களத்தில் இறங்கி அரசியல் பணி செய்யக் கூடியவர். இதனால் அவரை கட்சியின் சில முக்கிய கட்டமைப்புக் குழுவில் இணைப்பது தொடர்பாக அண்மையில் பாஜக தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்,

மோடி சூசகமாக சொன்னார்
அப்போது, மனோஜ் சின்ஹாவுக்கு வேறொரு பணி இருக்கிறது.. அவரை விட்டுவிடலாம் என மோடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டு மனோஜ் சின்ஹா மீண்டும் மத்திய அமைச்சராவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

மனோஜ் சின்ஹாவுக்கு அழைப்பு
இந்நிலையில்தான் நேற்று மனோஜ் சின்ஹாவை அழைத்து பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் துணை ஆளுநராக நியமிக்கப்படுவது தொடர்பாக கூறியுள்ளார். இதனை மனோஜ் சின்ஹா ஏற்றுக் கொண்டார். இன்னொருபக்கம் இத்துடன் அவரது அரசியல் அத்தியாயம் முடிந்துபோகுமோ எனவும் ஆதரவாளர்கள் சிலர் அவரிடம் பேசி இருக்கின்றனர்.

மனோஜ் சின்ஹாவுடன் அமித்ஷா பேச்சு
அப்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மனோஜ் சின்ஹாவிடம் பேசியிருக்கிறார். இதனையடுத்துதான் முழு மனதுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ஒப்புக் கொண்டாராம் மனோஜ் சின்ஹா.












Click it and Unblock the Notifications