டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெத்த படித்தவர்களால் களை கட்ட போகும் 17-வது மக்களவை.. 40 டாக்டர்ஸ், 19 என்ஜினியர்ஸ்..நீளும் பட்டியல்

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மோடியை ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அமைச்சரவை பட்டியல் தயாராகி வருகிறது. மக்களுக்கு சேவை செய்ய வந்தாலும் அரசியல்வாதிகளுக்கும் குறைந்தபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.

இந்நிலையில் நாடு முழுவதும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் 19 பொறியாளர்கள் மற்றும் 40 மருத்துவர்களும் அடங்கியுள்ளனர். இந்த 40 மருத்துவர்களில் 11 பேர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் படித்த வேட்பாளர்களை அதிக அளவில் தென்னிந்திய கட்சிகள் தான் களமிறக்கின.

How many graduates and post graduates are in the 17th Lok Sabha? Here are the details

மக்களவை தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பாதிக்கு பாதி பேர் நன்கு கல்வி பயின்றவர்களாக இருந்தனர். இதில் தற்போது வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் பட்ட மற்றும் பட்டயபடிப்பு முடித்துள்ளவர்கள். இது குறித்த தகவல்கள் பின்வருமாறு

தற்போது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் சுமார் 136 பேர் பட்டதாரிகள் ஆவர். மேலும் 134 பேர் முதுநிலை பட்டதாரிகளாக உள்ளனர். இவர்கள் தவிர 100 பேர் கிராஜுவேட் ப்ரொபஷனல்கள் ஆவர்.

டாக்டரேட் பெற்றவர்கள் 25 பேர், டிப்ளமோ முடித்தவர்கள் 5 பேர், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் 67 பேர், 10ம் வகுப்பு முடித்தவர்கள் 46 பேர், 8-ம் வகுப்பு முடித்தவர்கள் 12 பேர், 5-ம் வகுப்பு முடித்தவர்கள் 4 பேர் அடங்கியுள்ளனர். லிட்ரேட் முடித்தவர் ஒருவர், விவசாயி ஒருவர், படிப்பறிவில்லாதவர் ஒருவரும் தற்போதைய மக்களவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த எம்.ஜி.ஆராக உருவெடுப்பாரா ரஜினிகாந்த்?... குருமூர்த்தியின் கணிப்பு இது தான் அடுத்த எம்.ஜி.ஆராக உருவெடுப்பாரா ரஜினிகாந்த்?... குருமூர்த்தியின் கணிப்பு இது தான்

படித்த பட்டதாரி வேட்பாளர்கள் என்னென்ன படிப்புகளை படித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர்களில் 80 பேர் பிஏ படித்துள்ளனர்.

67 பேர் எல்எல்பி, 52 பேர் எம்ஏ, 35 பேர் பிஎஸ்சி, 24 பேர் பிஎச்டி, 22 பேர் பிகாம், பொறியியல் படிப்புகளை 19 பேரும் படித்துள்ளனர். மேலும் இவர்களில் 15 பேர் எம்எஸ்சி, 12பேர் எம்பிஏ, 9 பேர் பிஎட், 4 பேர் எம்காம், 3 பேர் பிபிஏ, ஒருவர் பிசிஏ, 2 பேர் பிஎச்எம்எஸ், 3 பேர் பிபிஎம், 2 பேர் பிபிஎட், 3 பேர் பிஜிடிப்ளமோ படிப்புகளை படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

English summary
There are 19 engineers and 40 doctors who are elected to the 17th Lok Sabha.11 doctors in surgeons are also experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X