வருமான வரி தாக்கல் செய்யாமல் மிஸ் பண்ணிட்டீங்களா? கவலை வேண்டாம்! இதை செய்யுங்க..TDS விலக்கு பெறலாம்
டெல்லி: உரிய நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் டிடிஎஸ் ( TDS) மூலத்தில் வரி விலக்கு பெறுவதற்கான வழிகளைப் பார்க்கலாம்.
இந்தியாவில் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரியைச் செலுத்த வேண்டும். தனி நபர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து 10, 20, 30% வரி விதிக்கப்படும்
இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யக் கடந்த ஜூலை 31ஆம் தேதி தான் கடைசி நாளாகும். கடைசி நாளில் மட்டும் பல ஆயிரம் பேர் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்தனர்.

வருமான வரி
கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா தொடங்கி பல்வேறு காரணங்களால் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி பல முறை நீட்டிக்கப்பட்டது. இதனால் பலரும் இந்த முறையும் கடைசி தேதி நீட்டிக்கப்படும் என்றே நினைத்தனர். ஆனால், இந்த முறை எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் வருமான வரி தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்படவில்லை. இதனால் பலரும் வருமான வரி தாக்கல் செய்யத் தவறியிருக்கலாம். அப்படித் தவறியவர்கள் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்.

எப்போது பொருந்தும்
இந்திய வருமான வரி விதிகளின்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிந்துவிட்டால், வரி செலுத்துவோர் டிடிஎஸை திரும்பப் பெற முடியாது என்றே கூறப்படுகிறது. இருந்த போதிலும், சில குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றி ஒருவர் தங்கள் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெறலாம். ஆனால், இந்த முறையைப் பின்பற்றி அனைவரும் டிடிஎஸ் பெற முடியாது. சில சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே இது பொருந்தும்.

யார் தாக்கல் செய்யலாம
வருமான வரி தாக்கலுக்கு பின்னரும் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உள்ளன. இருப்பினும், வரி செலுத்துவதில் உண்மையாகவே அவர்கள் பிரச்சினைகளைச் சந்தித்து இருந்தால் மட்டுமே இது பொருந்தும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான க்ளெய்மை வருமான வரி முதன்மைத் தலைமை ஆணையர் பெறுவார். எந்தவொரு தனி நபரும், நிறுவனம் இந்த முறையில் டிடிஎஸ் தாக்கல் செய்யலாம்.

டிடிஎஸ்
வருமான வரி தாக்கல் செய்யும் போது, உரிய விலக்கைக் கோரவில்லை என்றால் அப்போது அதிக வருமான வரியைத் தாக்கல் செய்யும் சூழல் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வருமான வரி தாக்கல் தேதிக்குப் பின்னரும் கூட வரி விலக்கு கோரி விண்ணப்பிக்க முடியும். பிரிவு 119ன் கீழ் ஒருவர் வரி விதிக்கக்கூடிய வருமானம் அடிப்படை விலக்கு வரம்பான ரூ.2.5 லட்சம், மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சத்தைத் தாண்டவில்லை என்றால், கழிக்கப்பட்ட டிடிஎஸ் மீது க்ளைம் தாக்கல் செய்யலாம்.

எப்படி
1 சம்பந்தப்பட்ட அதிகார வரம்பு அதிகாரிகளுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுத வேண்டும். எந்தப் பிரச்சினைக்காக வருமான வரி தாக்கல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது என்பதை அதில் தெளிவாக விளக்க வேண்டும்.
2 வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவைத் தவறவிட்டதற்கான காரணத்தை விளக்கும் வகையிலான சான்றுகளையும் அதில் குறிப்பிட வேண்டும். இந்த கடிதத்தை அனுப்பிய பின்னர், அதன் ஸ்டேடஸை வருமான வரி போர்ட்டலில் பார்க்கலாம்.
3 விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் போர்ட்டலின் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications