பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: மனைவிக்கு அவரது குடும்பத்தினர் கொடுக்கும் நகை, பணம் உள்ளிட்ட சீதனங்களில் கணவர் எவ்வித உரிமையும் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொதுவாக நமது நாட்டில் திருமணத்தின் போது பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தில் இருந்து சீதனம் வழங்குவார்கள். பெண்களுக்கு இந்த சீதனம் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான சூழல்களில் இதை கணவன்மார்களே வைத்திருப்பார்கள்.

உரிமை இல்லை: இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இப்போது முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது மனைவிக்குச் சீதனமாகத் தரப்படும் பொருட்களின் மீது கணவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடும்பத்திற்குக் கஷ்டம் ஏற்படும் போது கூட பெண்களுக்குச் சீதனமாகத் தரப்படும் பொருட்களில் கணவரால் உரிமை கோர முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தனது தங்கத்தைக் கணவர் முறைகேடாக பயன்படுத்திவிட்டதாகப் பெண் அளித்த புகாரில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், அந்த பெண்ணிடம் எடுத்த தங்கத்திற்கு ஈடாக ₹25 லட்சத்தை அவருக்கு இழப்பீடாக வழங்கவும் அந்த நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மனைவிக்கு வரும் சீதனத்தை அவர்களிடமே தருவது கணவன்மார்களின் தார்மீகக் கடமை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
என்ன வழக்கு: திருமணத்தின் போது தனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும் சீதனமாக வழங்கியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை எல்லாம் வாங்கியுள்ளார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம் கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கேட்டதற்கு அப்போது தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம் செய்துள்ளார்.
இருப்பினும், தனது கணவரும் மாமியாரும் தனக்குச் சீதனமாக வந்த நகைகளை விற்று அவர்களின் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர் என்பதே அந்த பெண் தொடர்ந்து வழக்கு.
நீதிமன்றங்கள்: கடந்த 2011ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், பெண்ணின் தங்க நகைகளைக் கணவரும் அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்தது. இருப்பினும், கணவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதை அந்த பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்: இருப்பினும், அந்த பெண் கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த போது தான் சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்த பெண்ணின் சொத்தாகவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
மேலும், கேரள ஐகோர்ட் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. திருமணத்தில் நம்பிக்கையும், பரஸ்பர புரிதலும் அவசியம் என்றும், ஒரு பெண் தன் கணவனை ஆரம்பத்திலிருந்தே நம்பவில்லை என்று கருதுவது சாத்தியமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதைப் புரிந்து கொள்ளாமல் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
25 லட்சம்: அந்த பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்ற போது நகைகளை எடுத்துச் சென்றது புகைப்படங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் 89 சவரன் தங்கத்திற்கு நிகராக ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications