"பாகிஸ்தான் வரதட்சணையாக வேண்டும்".. திருமணம் செய்ய விரும்பிய பாக்., பெண்ணுக்கு வாஜ்பாய் கொடுத்த ‛ரிப்ளை’.. சுவாரசியம்
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் சென்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயை, அந்த நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், அதற்கு பதில் காஷ்மீரை பாகிஸ்தானிடம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு வாஜ்பாய் கொடுத்த ரிப்ளை குறித்த சுவாரசியமான தகவலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார்.
நம் நாட்டின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924ம் ஆண்டு 25ம் தேதி வாஜ்பாய் பிறந்தார். பாஜகவை உருவாக்கிய தலைவர்களில் முதன்மையானவர் தான் வாஜ்பாய்.

இவர் கடந்த 1996ம் ஆண்டில் 13 நாட்கள் பிரதமராக இருந்தார். அதன்பிறகு 1998 முத் 1999 வரை 13 மாதம் பிரதமராக இருந்தார். பிறகு 1999 முதல் 2004 வரை 5 ஆண்டு பிரதமராக ஆட்சியை நிறைவு செய்தார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத பிற கட்சியின் பிரதமராக 5 ஆண்டை நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். வாஜ்பாய் கடந்த 2018 ஆகஸ்ட் 16ம் தேதி மறைந்தார்.
வாஜ்பாய் அரசியல் மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். கவிதைகள் நிறயை எழுதி உள்ளார். இந்நிலையில் தான் இன்று நாடு முழுவதும் வாஜ்பாயின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில், நல்லாட்சி தினமாக அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் பாஜகவினர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வாஜ்பாய் குறித்த சுவாரசிய தகவலை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார். வாஜ்பாய் உடனான தனது பழைய கால நினைவுகளை ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் தான் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில்குமார் விஸ்வாஸ் என்பவர் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் தான் ராஜ்நாத் சிங் பங்கேற்று சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
‛‛வாஜ்பாய் அரசியல்வாதியாக இருந்தாலும் கூட வாஜ்பாய் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். பாகிஸ்தானுக்கு அவர் சென்றிருந்தார்.அப்போது அவரது பேச்சை கேட்டு பெண் ஒருவர் மயங்கினார். அந்த பெண் வாஜ்பாயிடம், ‛நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன். அதற்கு பதில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு வழங்க முடியுமா?' என்று கேட்டார். அதற்கு வாஜ்பாய், ‛நான் உங்களை திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு வரதட்சணையாக பாகிஸ்தானை தர வேண்டும். உண்மையில் வாஜ்பாயிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது.
அதேபோல், அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒவ்வொரு முறை விமர்சனம் செய்யும்போதும் அவர் கண்ணியத்துடன் நடந்து கொண்டார். ஒருமுறை கூட எல்லை தாண்டி அவர் பேசியது இல்லை. கவிதை, இலக்கிய நடையில் விமர்சனங்களை முன்வைப்பார் ஒருமுறை இமாச்சல பிரேதச முதல்வர் வீரபத்ரசிங் (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) முன்னிலையில் பேசினார். அப்போது அங்குள்ள வீரபத்ர சிங்கின் பெயரை பயன்படுத்தி பேசினார். அங்குள்ள அமைச்சர்கள் அனைவரும் பத்ரா (பத்திரமாக) உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வீர் (தைரியம்) இல்லை என்று கூறி விமர்சனம் செய்தார்.
கடந்த 1994ம் ஆண்டில் பாஜகவில் அதிகமானவர்கள் சேர்ந்தனர். இந்த வேளையில் பொதுக்கூட்டத்தில் கவித்துவமாக வாஜ்பாய் பேசினார்.அழகான, பெரிய கண்களை பார்க்கும்போது எப்படி மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அதேபோல் ஒருவரின் குடும்பம் (பாஜக)வளர்ச்சியடைவதை காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி இருக்கிறது என்றார். அப்போது அவர் அருகே நான் இருந்தேன். இது எனக்கு கிடைத்த பெரும்பாக்கியம். வாஜ்பாய் இந்தியாவின் அரசியல் வானில் பிரகாசித்தார். என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருப்பார்'' என்று வாஜ்பாய் உடனான தனது மலரும் நினைவுகளை ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டார்.
வாஜ்பாய் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனது நெருங்கிய தோழியான ராஜ்குமாரி கவுலின் மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யாவை வளர்ப்பு மகளாக வளர்த்தார். நமிதா கவல் தான், வாஜ்பாயின் மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் வாஜ்பாயின் நினைவு நாள், பிறந்தநாளிலும் அவர் தவறாமல் வாஜ்பாய் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்றும் டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் நமிதா கவுல் பட்டாச்சார்யா மரியாதை செலுத்தினார்.
வாஜ்பாய் பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். கன்னியாகுப்ஜ பிராமணர் பிரிவை சேர்ந்தவர். அவரது தாய் பெயர் கிருஷ்ணா தேவி. தந்தை பெயர் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய். தந்தை பள்ளி ஆசிரியராக இருந்தார். வாஜ்பாய் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றில் இளநிலை படிப்பை முடித்தார். அதன்பிறகு முதுநிலை படிப்பை பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவில் முடித்தார்.
பிறகு ஜனசங்கம் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். பிறகு பாஜகவை உருவாக்கி பிரதமராக அரியணையில் அமர்ந்தார். இவர் 10 முறை லோக்சபா எம்பியாகவும், 2 முறை ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார். மத்திய பிரதேசத்தில் குவாலியர், பல்ராம்பூர், டெல்லி, உத்தர பிரதேச மாநிலம் லக்னோ உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து அவர் எம்பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications