என்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்!
என்னை எளிதாக முடக்கிவிட முடியாது, நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: என்னை எளிதாக முடக்கிவிட முடியாது, நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
சட்ட போராட்டத்திற்கு பிறகு ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 106 நாட்களுக்கு பின் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இன்று டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தும், தன்னுடைய உடல் நிலை குறித்தும் அவர் பேட்டி அளித்தார்.

என்ன பேட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது பேட்டியில், என்னுடைய ஆன்மா இப்போதும் வலுவாக இருக்கிறது. என்னை எளிதாக முடக்கிவிட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன். நான் நினைத்ததை விட என் உடலும் வலிமையாக இருக்கிறது.

வலிமை
நான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்து தூங்கினேன். அது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது.என் கழுத்து வலுவாக இருக்கிறது. என் தலை வலுவாக இருக்கிறது. என் முதுகெலும்பு வலுவாக இருக்கிறது.

குரல் கொடுப்பேன்
என் குரலை ஒடுக்க முடியாது. நான் தொடர்ந்து பேசுவேன். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பேன். தொடர்ந்து இவர்கள் செய்யும் தவறுகளை உங்களுக்கு வெளிக்காட்டுவேன். சில குரல்களை உங்களால் ஒடுக்க முடியாது. உங்களுக்கு திறமையும் இல்லை, நேர்மையும் இல்லை, உங்களிடத்தில் உண்மையும் இல்லை.

எதிர்காலம்
நாடு நல்லா இருக்கும், நல்ல எதிர்காலம் வரும் என்றெல்லாம் கூறி மக்களை இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நான் பாராளுமன்றத்தில் இதை எல்லாம் பேசுவேன். அங்கு உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது, என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications