மகளிர் இடஒதுக்கீடு மசோதா- இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார்: லோக்சபாவில் மோடி
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா எனும் பணியை செய்ய கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார் என லோக்சபாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் லோக்சபாவில் பிரதமர் மோடி நேற்று பேசியதன் சில முக்கிய அம்சங்கள்:

- சுதந்திரப் போராட்டத்தின் போது, லோகமான்ய திலகர் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் சுயராஜ்ஜிய சுடர் ஏற்றுவதற்கான ஊடகமாக மாற்றினார். இன்று நாம் அதே உத்வேகத்துடன் நகர்கிறோம்.
- இன்று சம்வத்சரி பர்வம், அதாவது மன்னிப்புத் திருநாள். யாரையாவது புண்படுத்தக்கூடிய, வேண்டுமென்றே அல்லது தற்செயலான எந்தவொரு செயலுக்கும் மன்னிப்புக் கேட்பதே இந்தப் பண்டிகை. பண்டிகையின் உணர்வில் அனைவருக்கும் மிச்சாமி துக்கடம் (நிகழ்ந்துவிட்ட துர்செயல்கள் பலனற்று போகட்டும்). கடந்த காலத்தின் அனைத்துக் கசப்புகளையும் விட்டுவிட்டு முன்னேறுவோம்.
- பழைய மற்றும் புதியவற்றுக்கு இடையிலான இணைப்பாகவும், சுதந்திரத்தின் முதல் ஒளியின் சாட்சியாகவும் புனித செங்கோல் இருக்கிறது. இந்தப் புனிதமான செங்கோலை இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தொட்டார். செங்கோல் நமது கடந்த காலத்தின் மிக முக்கியமான பகுதியுடன் நம்மை இணைக்கிறது.
- 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தக் கட்டிடத்திற்குப் பங்களித்திருக்கின்றனர்.
- நாட்டுக்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த இடம் நாடாளுமன்றம்.
உறுப்பினர்கள் என்ற முறையில், நமது வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களால் அரசியலமைப்பின் உணர்வை நாம் நிலைநிறுத்த வேண்டும்.

நாம் அனைவரும் நாடாளுமன்ற பாரம்பரியத்தின் லட்சுமண ரேகையைப் பின்பற்ற வேண்டும்.
- மகளிர் இடஒதுக்கீடு- இந்த வேலையைச் செய்ய கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று நான் நம்புகிறேன். இந்த மசோதாவின் நோக்கம் மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகும். .
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications