Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏகலைவன் கட்டைவிரல்.. இன்றும் தீண்டாமை.. 'EWS' சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிட்ட திமுக எம்.பி வில்சன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையில் திமுக சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் எடுத்து வைத்த வாதங்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

ஏகலைவனின் கட்டை விரல் ஏன் கேட்கப்பட்டது என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை, இன்றும் நமது குடியரசுத் தலைவர் கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்படாதது குறித்தும் நான் குறிப்பிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றத்தில் பேசியுள்ளார் வில்சன்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின்படி செல்லுமா என்பது குறித்து மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வருகின்றன.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதி ரவிந்தரா பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோர் விசாரிக்கின்றனர்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் 103வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு 2019ஆம் ஆண்டு கொண்டுவந்தது. சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், 103ஆவது திருத்தமானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. இதை எதிர்த்து பலர் வழக்குகளைத் தொடர்ந்தனர். பல்வேறு மாநில அரசுகள் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

கடுமையான வாதங்கள்

கடுமையான வாதங்கள்

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு தரப்படும் 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் கடுமையான வாதங்கள் நடைபெற்று வருகின்றன. உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியல் சட்டத்திருத்தத்தை எதிர்த்து, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

சிங்கத்திற்கும் எருதுக்கும் ஒரே சட்டமா?

சிங்கத்திற்கும் எருதுக்கும் ஒரே சட்டமா?

இன்று உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் வைத்த வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுக சார்பாக ஆஜரான பி.வில்சன் தனது வாதத்தை "சிங்கத்திற்கும், எருதுக்கும் ஒரே சட்டம் என்பதே ஒடுக்குமுறைதான். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு, மறுபுறம் EWS இட ஒதுக்கீடு பற்றி நான் சொல்ல விரும்புவது இதுதான்" எனக் கூறித் தொடங்கினார்.

4 பாயிண்ட்

4 பாயிண்ட்

மேலும் அவர், "முதலில், உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு 103 சட்டத் திருத்தமே அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். இரண்டாவது, இந்த சிந்தனையே கேலிக்கூத்தானது. மூன்றாவது, EWSல் இடம்பெற்றுள்ள வகைப்பாடு நியாயமற்றது. நான்காவதாக, நான்காவதாக, இந்த சட்டம் இது மீறலை அனுமதிக்கிறது. கடுமையான மீறல் நடக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை." என வாதாடினார்.

மேற்கோள் காட்டிய வில்சன்

மேற்கோள் காட்டிய வில்சன்

மேலும், இந்த வழக்கின்போது, டால்மியா சிமெண்ட் வழக்கு, இந்தியா சாவ்னி தீர்ப்பு, அசோகா குமார் தீர்ப்பு ஆகியவற்றையும் மேற்கோள் காட்டினார் வில்சன். சமூக மற்றும் பொருளாதார நீதி ஆகியவை வெவ்வேறானவை என அந்த வழக்குகளைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டினார் வில்சன். இந்திரா சாவ்னி தீர்ப்பில் உள்ள சிக்கல்களையும் குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார் வில்சன்.

கார் இல்லாத மக்கள்

கார் இல்லாத மக்கள்

பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் யார் என்பதை அரசு அவ்வப்போது அறிவிக்க வேண்டும். கார் இல்லாத மக்கள் எல்லோரும் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருப்பவர்கள் என நாளை சொல்வார்கள். சமத்துவத்திற்கு ஒரு வலுவான அச்சுறுத்தல் உள்ளது. அது நீதிமன்றத்திற்கு வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. 15(6)ஐ அமல்படுத்தினால் சமத்துவம் பறிபோய்விடும். இடஒதுக்கீடு என்பது 46ன் கீழ் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என வாதிட்டார் வில்சன்.

ஏகலைவன் கதை

ஏகலைவன் கதை

நமது சமுதாயத்தில் இன்றும் தீண்டாமை என்பது நிலவுகிறது. முன்பு வர்ணாசிரம் என்பது இருந்தது. தற்போது ஜாதி என்பது இருக்கின்றது. மகாபாரதத்தில் ஏகலைவனுடைய கட்டைவிரல் எதற்காக கேட்கப்பட்டது என்பது குறித்து நான் கேட்க விரும்பவில்லை. இன்றும் நமது குடியரசுத் தலைவர் கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்படாதது குறித்தும் நான் குறிப்பிட விரும்பவில்லை.

இதுதான் எங்கள் பயம்

இதுதான் எங்கள் பயம்

இடஒதுக்கீடு கொண்டு வந்தது ஏன்? பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சம்பிரதாய சமத்துவம் அல்ல, உண்மையான சமத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால்தான் தமிழ்நாடு சமூக முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. இன்று நம்மிடம் மிகச் சிறந்த இட ஒதுக்கீடு திட்டங்கள் உள்ளன. இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமத்துவத்தைப் பாதிக்கிறது என்பதுதான் எங்கள் அச்சம் என வில்சன் வாதிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+