குடியரசு துணைத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்தது.. ஆனால் என் பயணம் தொடரும்.. வெங்கையா நாயுடு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், நாட்டுப் பணியில் மீதமுள்ள பயணத்தை தொடருவேன் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Array

    குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்து வந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று புதிய குடியரசு துணைத் தலைவர் பதவி ஏற்றவுடன், வெங்கையா நாயுடு தனது குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு புறப்பட உள்ளார். அவருக்கு டெல்லியில் தியாகராஜா மார்க்கில் 1-ம் எண் முகவரியில் உள்ள பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

    மரக்கன்று

    மரக்கன்று

    இதனிடையே நேற்று நாடாளுமன்ற வளாகத்தில், வெங்கையா நாயுடு மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். இதனைத்தொடர்ந்து குடியரசு துணைத் தலைவராக வெங்கையா நாயுடு கடைசியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். அதில், ஊடகங்கள் அளித்த ஆதரவுக்காக இதயப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு துணைத் பதவிக்காலம் முடிந்தவுடன், நாட்டுப் பணியில் எனது பயணத்தை தொடருவேன். இனிவரும் நாட்களில் மக்களுடன் அதிகமாக உரையாடுவேன்.

    வெங்கையா நாயுடு

    வெங்கையா நாயுடு

    முக்கியமாக, இளைஞர்கள், விவசாயிகள் மீது எனது கவனம் அதிகம் இருக்கும். தனக்கு இன்னும் சில நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்துள்ளன. குறிப்பாக 2 நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அழைப்பிதழ் கொடுக்க வந்தவர்களிடம், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பின் நான் குடியரசு துணைத் தலைவர் அல்ல என்று கூறினேன். அதற்கு அவர்கள், குடியரசு துணைத் தலைவராக உங்களை அழைக்கவில்லை. வெங்கையா நாயுடுவாகத்தான் அழைத்தோம் என்று பதிலளித்தனர்.

     ரகசியம்

    ரகசியம்

    ஒருமுறை தனக்கு வந்த கடிதத்தில், ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும், பதவியே இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து செய்தியில் அடிபடுவது எப்படி?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரை நான் நேரில் சந்தித்தபோது, நான் சொல்வதில் கருத்தும், பொருளும் இருக்கும். அதை பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. அதுதான் ரகசியம் என்றேன்.

    பயணம் தொடரும்

    பயணம் தொடரும்

    ஜனாதிபதியாக இருக்க வேண்டும் அல்லது அதிருப்திவாதியாக இருக்க வேண்டும் அல்லது வீட்டோடு இருக்க வேண்டும் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். எனக்கு அந்த பழமொழியில் நம்பிக்கை இல்லை. வரும் 12ம் தேதி முதல் எனது பயணத்தை தொடருவேன் என்று தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+