• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாலுவின் ஆட்டத்துக்கு ரியாக்‌ஷன்! பீகாரில் முடிஞ்சா ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய பாஜக சவால்!

Google Oneindia Tamil News

டெல்லி: பீகாரில் காங்கிரஸ்-ஆர்ஜேடி- ஜேடியூ கூட்டணி ஆட்சிதானே நடைபெறுகிறது.. முடிந்தால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை தடை செய்துதான் பாருங்கள் என பாஜக சவால்விடுத்துள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை. அண்மையில் இந்த இயக்கத்தின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் தடை.. மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் தடை.. மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது தடை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது தடை

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீதான தடைக்கு பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உள்ளிட்டவையும்தான் இந்து மதவெறியை பரப்புகின்றன; வன்முறை செயல்களில் ஈடுபடுகின்றன. ஆகையால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

லாலு கேள்வி

லாலு கேள்வி

இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்திருந்த ஆர்ஜேடி (ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்துமதவெறியை பரப்புகிற ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை ஏன் மத்திய அரசு தடை செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

மீண்டும் லாலுவின் ஆட்டம்

மீண்டும் லாலுவின் ஆட்டம்


லாலு பிரசாத் யாதவின் இந்த கேள்விகள் பாஜகவை அதிரவைத்துள்ளது. ஏனெனில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கங்களை மிக கடுமையாக எதிர்க்கக் கூடிய தலைவர்களில் லாலு பிரசாத் யாதவ் முதன்மையானவர். மாட்டுத் தீவன் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்தார். இவ்வழக்குகளில் ஜாமீனில் விடுதலையான லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் ஓய்வெடுத்திருந்தார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தும் வந்தார். அண்மையில் பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து ஜேடியூ- லாலுவின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இணைந்து புதிய ஆட்சி அமைத்தது. பின்னர் டெல்லியில் லாலு பிரசாத் யாதவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோனியா காந்தியை நிதிஷ், லாலு இருவரும் சந்தித்து பேசினர். இச்சந்திப்பு தேசிய அரசியலில் மிக முக்கியத்துவமானதாக பார்க்கப்பட்டது.

பாஜக சவால்

பாஜக சவால்

இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியை பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் கிரிராஜ் சிங் கூறுகையில், பீகாரில் உங்களது அரசாங்கம்தானே செயல்பட்டு வருகிறது. முடிந்தால் பீகார் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை தடை செய்து அறிவியுங்கள்.. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்து பார்க்கத்தான் தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், பாஜகவினராகிய நாங்கள் ஆர்.எஸ்.எஸ். ஊழியன், தொண்டன் என பெருமிதமாக சொல்வோம்.. உங்களால் பி.எப்.ஐ. உறுப்பினர் என சொல்லத்தான் முடியுமா? எனவும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

English summary
BJP leader Giriraj Singh said, Lalu and his alliance parties had the government in Bihar. If they have the courage, then ban RSS is Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X